எம்.இ, எம்.டெக் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு வரும் மார்ச் 20, 21ம் தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழக அரசிற்கு உட்பட்ட பல்கலைக் கழகங்களின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க, டான்செட் (TANCET) எனும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் இந்த ஆண்டு வரும் மார்ச் 20 மற்றும் 21ம் தேதிகளில் டான்செட் தேர்வு நடைபெறவுள்ளது.
இதில், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட வகுப்புகளுக்கு மார்ச் 21ம் தேதியன்றும், எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட வகுப்புகளுக்கு மார்ச் 20ம் தேதியன்றும் நுழைவுத் தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
தற்போது இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 12ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை https://tancet.annauniv.edu/tancet/ index.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.