SSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) சார்பில் தற்போது ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பிரிவுக்கான SSC CGL என்னும் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) சார்பில் தற்போது ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பிரிவுக்கான SSC CGL என்னும் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு www.sscsr.gov.in என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

SSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி!

மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட 34 விதமான பணியிடங்களுக்கு எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எந்தத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் ரூ.47,600 முதல் ரூ. 1,51,100 வரையிலான ஊதியத்தில் பணியில் சேர்க்கப்படுவர்.

வயது வரம்பு:-

எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு பணிகளுக்கு ஏற்ப மாறுபடும். இதில், குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு இத்தேர்விற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:-

உதவி கணக்காளர், கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சிஏ படிப்பு கூடுதல் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை புள்ளியியல் அலுவலர் பணியிடத்திற்கு 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஓரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 12 வகுப்பில் கணித பாடம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் :-

எஸ்எஸ்சி சிஜிஎல் எழுத்துத் தேர்விற்கான விண்ணப்பப்பதிவு அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதற்கு நவம்பர் 25 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் : 100 ரூபாய் ஆகும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் அல்லது நேரடியாக வங்கியின் மூலமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் நவம்பர் 27 ஆம் தேதிக்குள்ளாகவும், வங்கியின் மூலமாக நவம்பர் 29 ஆம் தேதிக்குள்ளாகவும் செலுத்த வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதி : முதல் நிலைத் தேர்வுகள் 2019 மார்ச் 2 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறும்.

தேர்வு மையங்கள் :

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

தெற்கு மண்டல எஸ்எஸ்சி அலுவலக முகவரி : Regional Director (SR), Staff Selection Commission, 2 nd Floor, EVK Sampath Building, DPI Campus, College Road, Chennai, Tamil Nadu-600006. www.sscsr.gov.in

எஸ்எஸ்சி சிஜிஎல் 2019 தேர்வு குறித்த முழு விபரங்களைக் காணவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SSC CGL 2019: Staff Selection Commission releases notification, Check Exam Date and full details here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+