அண்ணா பல்கலை அரியர், செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலையின் அரியர் மற்றும் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

 

அண்ணா பல்கலை அரியர், செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட வேண்டிய பருவத் தேர்வுகள் கொரோனா தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா தீவிரமடைந்த நிலையில், மாணவர்களின் நலன்கருதி கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் ஆன்லைன் வழியில் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதனிடையே, பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்புகளில் 2, 3 மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் 11-ம் தேதியன்று வெளியிட்டது.

அந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், அந்தத் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் இருந்து அரியர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மற்றும் அண்ணா பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்களின் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://aucoe.annauniv.edu/regular_result_nd2020/index.php என்னும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் காணலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Special Arrear Exam Result 2021 Released by Anna University, Direct link here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X