பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 8 ஆயிரத்திற்கும் அதிகமான ஜூனியர் அசோசியட் (கிளார்க்) பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று ஹால் டிக்கட் வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான கிளார்க் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் இதற்கான முதனிலைத் தேர்வு (Preliminary Exam) இந்த மாதம் (2020 பிப்ரவரி) இறுதியில் நடைபெறவுள்ளது.
தற்போது, எஸ்பிஐ கிளார்க் பணிக்கான தேர்விற்கு ஹால்டிக்கெட், SBI Clerk Admit Card 2020 இன்று வெளியாக உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் www.sbi.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய nதர்வு நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் எஸ்பிஐ தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்யும் முறை:
- விண்ணப்பதாரர்கள் www.sbi.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லவும்.
- முகப்பு பக்கத்தில் SBI Clerk Admit Card 2020 என குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை கிளிக் செய்யவும்.
- தற்போது கிளார்க் பணிக்கான தேர்வு ஹால்டிக்கெட் அடங்கிய புதிய பக்கம் திறக்கும்.
- அங்கே, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பதிவு எண், கடவுச்சொல் ஆகியவற்றை பதிவு செய்து ஹால் டிக்கட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு நுழைவுச் சீட்டில் பெயர், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications












