தேர்வுத் தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட கணிதத் தேர்வு வரும் டிசம்பர் 12ம் தேதியன்று நடைபெறும் என அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கடந்த டிசம்பர் 3ம் தேதியன்று கணிதத் தேர்விற்கான அரியர் தேர்வு நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சுமார் 350-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இத்தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், தேர்வு துவங்கிய சில நிமிடங்களிலேயே அந்தத் தேர்வின் வினாத்தாள் ஏற்கனவே வெளியாகியிருப்பது குறித்து அதிகாரிகளிடம் புகார் வரப்பெற்றது. இதனை உறுதி செய்த அதிகாரிகளும் உடனடியாக தேர்வை ரத்து செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே, ரத்து செய்யப்பட்ட கணிதத் தாள் 2 பாடத்திற்கான அரியர் தேர்வு வரும் டிசம்பர் 12ம் தேதியன்று நடைபெறும் என அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
anna university education exam university student chennai tamilnadu அண்ணா பல்கலைக் கழகம் தேர்வு கல்வி மாணவர்கள் சென்னை தமிழகம்
English summary
Question paper leak: Anna University re-exams on December 12
Story first published: Saturday, December 8, 2018, 12:25 [IST]


Click it and Unblock the Notifications












