தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வுகளுக்கு (என்எம்எம்எஸ்) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்குத் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

8-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான என்எம்எம்எஸ் தேர்வு வரும் டிசம்பர் 1ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டு www.dge.tn.gov.in என்னும் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி நுழைவுச் சீட்டுக்களை நவம்பர் 22ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம்.
English summary
NMMS Admit Card 2018 - Download Here
Story first published: Friday, November 23, 2018, 16:58 [IST]


Click it and Unblock the Notifications












