மருத்துவ படிப்புகளுக்கான முதுநிலை நீட்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் http://nbe.edu.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்களுடைய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா உள்ளிட்டவற்றில் சேர வேண்டும் எனில் மருத்துவ நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்கும் முதுநிலை நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தற்போது, 2020 ஆம் ஆண்டிற்கான நீட் முதுநிலைத் தேர்வு கடந்த 5 ஆம் தேதியன்று நடைபெற்றது. அதற்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் பங்கேற்றவர்கள் www.nbe.edu.in என்னும் இணையதளத்தில் தங்களுக்கான தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
மேலும், இந்த தேர்வு முடிவுகள் பிப்ரவரி 3 ஆம் தேதி வரையில் மட்டுமே ஆன்லைனில் இருக்கும். தேர்வு எழுதியவர்கள், அதற்குள்ளாக தங்களது தேர்வு முடிவினை பார்க்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












