2020ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேவு கடந்த வாரம் நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான தேர்வு முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கி, 6ம் தேதி வரையில் நடைபெற்று முடிந்தது. இதில், நாடு முழுவதும் இருந்து 660 மையங்களில் 9 லட்சத்து 53 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த இத்தேர்விற்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இந்நிலையில், தற்போது JEE Main 2020 தேர்வு முடிவு வெளியாகியுள்ளது.
JEE Main 2020 தேர்வு முடிவு காணும் வழிமுறைகள்
- விண்ணப்பதாரர் jeemain.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத பக்கத்திற்கு செல்லவும்.
- முகப்பு தளத்தில் 'JEE Main result 2020' எனும் பகுதியை கிளிக் செய்யவும்.
- தற்போது புதிய இணைய பக்கம் திறக்கும்.
- அங்கே தங்களின் ஜேஇஇ பதிவு எண் மற்றும் ரகசிய குறியீட்டை பதியவும்.
- இறுதியாக தற்போது உங்களின் தேர்வு முடிவு திரையில் தோன்றும், பிற்காலத் தேவைக்காக அதனை பதிவிறக்ககம் செய்து கொள்ளவும்.


Click it and Unblock the Notifications












