தேசிய தேர்வு முகமை (NTA) ஜே.இ.இ. மெயின் 2020 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட உள்ளது. தேர்வு முடிவுகள் அதன் அதிகாரபூர்வ இணைய தளமான ntaresults.nic.in ல் வெளியாக உள்ளன. தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண், கடவுச் சொல்/பிறந்த தேதியை வழங்கி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் முயற்சியில் பெற்ற மதிப்பெண்கள், இரண்டாம் முயற்சியில் பெற்ற மதிப்பெண்கள், தேர்வர்களில் அகில இந்திய தர வரிசைப்பட்டியல், பிரிவு தரவரிசை, ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் கட்ஆஃப் மதிப்பெண் ஆகியவை இந்த தேர்வு முடிவுகளில் வெளியிடப்படும்.
பரிந்துரைக்கப்படுகிறது : [என்.ஐ.டி. ஐ.ஐ.டி. அரசுக் கல்லூரிகளில் ஜே.இ.இ. மெயின் மதிப்பெண்கள் தரநிலையின் அடிப்படையில் உங்களுக்கு இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து முன்னறிய இந்த சுட்டியை பயன்படுத்துவீர் ஜே.இ.இ மெயின் கல்லூரி முன்னறிவிப்பான்]
தேர்வர்கள் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
ஜே.இ.இ. மெயின் முடிவுகள் 2020யை தரவிறக்கம் செய்ய நடவடிக்கைகள்
- அதிகாரபூர்வ இணைய தளத்தில் ntaresults.nic.in நுழைக.
- "View result/Score card" என்ற சுட்டியை சொடுக்கவும்.
- ஜே.இ.இ. மெயின் 2020 விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் கொண்டு லாகின் செய்யவும்
- தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
- ஜே.இ.இ. மெயின் 2020 தேர்வு முடிவுகளை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
ஜே.இ.இ. மெயின் கட்ஆஃப்
தேர்வு முடிவுகளுடன் ஜே.இ.இ. மெயின் கட்ஆஃப் மதிப்பெண்ணும் அறிவிக்கப்படும். இதுவே தகுதிபெறும் கட்ஆஃப் ஆகும். என்.ஐ.டி.க்கள், ஐ.ஐ.ஐ.டிக்கள் மற்றும் சி.எஃப்.டி.ஐ.க்கள் ஆகியவற்றில் சேர்வதற்கு தகுதி பெறுவதற்கு தேர்வர்கள் பெற வேண்டிய நுழைவுத் தேர்வு குறைந்த பட்ச மதிப்பெண் தான் கட்ஆஃப் எனப்படும். இதைக்கொண்டுதான் ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்விற்கும் விண்ணப்பிக்க முடியும். தகுதிபெற்ற தேர்வர்கள் செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 17ந்தேதி வரை ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வுக்கு பதிவு செய்ய முடியும். இந்த தேர்வு செப்டம்பர் 27ந்தேதி நடத்தப்படும்.
ஜே.இ.இ. மெயின் மதிப்பெண்களின் அடிப்படையில், தேர்வர்கள் 31 என்.ஐ.டி.க்கள், 25 ஐ.ஐ.ஐ.டிக்கள் மற்றும் 28சி.எஃப்டி.ஐ.களில் சேருவதற்கு விண்ணப்பிக்கமுடியும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கூட்டு இட ஒதுக்கீடு ஆணையத்தால் (JoSAA) நடத்தப்படும். ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், இட ஒதுக்கீடு மற்றும் கலந்தாய்வு நடைமுறைகள் தொடங்கும்.