ஐபிபிஎஸ் சிறப்பு அதிகாரி பணியிடத்திற்கு நடைபெறவுள்ள தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் https://www.ibps.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) வங்கி சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு வரும் டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனிடையே, இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், தங்களுடைய தேர்வு நுழைவுச்சீட்டை (Admit Card) www.ibps.in என்னும் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
ஐபிபிஎஸ் சிறப்பு அதிகாரி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெறும் முறை:-
- விண்ணப்பதாரர் முதலில் www.ibps.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
- முகப்பு பக்கத்தில் 'Download IBPS SO Preliminary Exam Call Letter' என்னும் பகுதியை கிளிக் செய்யவும்.
- இப்போது புதிய பக்கம் ஒன்று திறக்கப்படும். அதில் விண்ணப்பதாரர்கள், தங்களுடைய தேர்வு பதிவு எண் மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) ஆகியவற்றை டைப் செய்து உள்நுழைய வேண்டும்.
- தற்போது இத்தேர்விற்கான ஹால் டிக்கெட் திரையில் காட்டப்படும். அதனை அப்படியே பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
தேர்வு நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்த பிறகு அதில் தங்களுடைய பெயர், புகைப்படம், தேர்வு பதிவு எண், தேர்வு மையம், தேதி உள்ளிட்டவை சரியாக உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications












