ஐபிபிஎஸ் பிஓ 2018-ஆம் ஆண்டிற்கான வங்கிப் பணித் தேர்வு முடிவுகள் அக்டோபர் 30ம் தேதியன்று வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அதில் மாற்றம் செய்யப்பட்டு இன்று (அக்டோபர் 31) வெளியாகும் என வங்கி பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

வங்கிப் பணியாளர்களுக்கான தேர்வுகள் சமீபத்தில் வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் 30ம் தேதியன்று வெளியிடப்படும் என ஐபிபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களினால் குறிப்பிட்ட தேதியில் வெளியிடாமல் இன்று (அக்டோபர் 31ம்) தேதியன்று வெளியிட உள்ளதாக ஐபிபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளைக் காண:-
1. https://ibps.in/ என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.
2. அதனுள் CRP PO Preliminary examinations 2018 பக்கத்தினை கிளிக் செய்யவும்.
3. அங்கே தங்களுடைய பதிவெண் மற்றும் இதர தகவலை பூர்த்தி செய்து 'submit' பட்டனை கிளிக் செய்யவும்.
4. ஐபிபிஎஸ் பிஓ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதனை பதிவிறக்கம் செய்து பிற்காலத் தேவைக்காக நகல் எடுத்துக் கொள்ளவும்.
இத்தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு அடுத்தகட்ட தேர்விற்காக அழைப்பு விடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications












