ஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டிற்கான ஐபிபிஎஸ் பிஓ தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் இந்த அட்மிட் கார்டினை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்மிட் கார்டானது மூன்று அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அவை,
- For Preliminary Exam
- For Mains Exam
- For Group Discussion/Personal Interview
விண்ணப்பத்தினைப் பெற https://www.ibps.in/crp-po-mt-viii/ இங்கே கிளிக் செய்யவும்.
இதில் ப்ரிலிமினரி தேர்வின் முதன்மைத் தேர்வானது 2018 அக்டோபர் 13, 14, 20 மற்றும் 21ம் தேதிகளிலும், முக்கியத் தேர்வானது 2018 நவம்பர் 18ம் தேதியன்றும் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் ஐபிபிஎஸ்-யின் அதிகாரப்பூர்வ தளத்தில் உங்களுக்கான தேர்வினை குறிப்பிட்டு அட்மிட் கார்டினைப் பெற வேண்டும்.
ஐபிபிஎஸ் பிஓ-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்களுடைய பதிவெண் இடும்பொழுது தேர்வு மையத்தின் விபரத்துடன் விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் தேர்வு விதிமுறைகளுடன் அட்மிட் கார்டு வெளிப்படும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும், ஐபிபிஎஸ் தேர்வு மைய அனுமதித்தாளிலேயே தேர்வு நடைபெறும் நாள், தேர்வு நடைபெறும் கால அளவு குறித்த விபரங்களும் அடங்கியிருக்கும். தேர்வு நடைபெறும் நாளன்று இந்த அட்மிட் கார்டினை கட்டாயம் எடுத்து வந்தால் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வி மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
இத்தேர்வு குறித்தான மேலும் விபரங்களை அறிய https://www.ibps.in/ அல்லது https://www.ibps.in/crp-po-mt-viii/ ஆகிய லிங்க்குகளை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












