ஐபிபிஎஸ் பிஓ பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

மொத்தம், 4,336 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஐபிபிஎஸ் பிஓ தேர்வு வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் வரை நடைபெறவுள்ளது.

By Saba

வங்கிப் பணியில் பணியாற்ற வேண்டும் என்றால் ஐபிபிஎஸ் சார்பில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறவேண்டியது கட்டாயம். இந்த அமைப்பின் சார்பில் ஐபிபிஎஸ் பிஓ தேர்வு நடைபெறவுள்ளதால் தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம், 4,336 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இத்தேர்வு வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் வரை நடைபெறவுள்ளது.

ஐபிபிஎஸ் பிஓ பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள இத்தேர்வில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதனைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தகுதியானவர்கள் பணி நியமனம் வழங்கப்படும்.

10 சதவிகித இட ஒதுக்கீடு:-

முதல்நிலை மற்றும் மெயின் தேர்வுகள் ஆகிய இரண்டுமே ஆன்லைனில் நடத்தப்படும். ஐபிபிஎஸ் நடத்தும் இத்தேர்வில் முதல் முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தேதிகள்:-

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் தொடங்கும் நாள் - ஆகஸ்ட் 7, 2019
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் முடியும் நாள் - ஆகஸ்ட் 28, 2019
ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் - ஆகஸ்ட் 28, 2019

தேர்வுக்கு முந்தைய பயிற்சிக்கான அட்மிட் கார்டு வெளியாகும் தேதி - செப்டம்பர் 2019
தேர்வுக்கு முந்தைய பயிற்சி நடைபெறும் தேதிகள் - செப்டம்பர் 23 - 28, 2019

முதல் நிலைத் தேர்வு:-

முதல்நிலை தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியாகும் தேதி - அக்டோபர் 2019
முதல்நிலை தேர்வு நடைபெறும் நாட்கள் - 2019 அக்டோபர் 12, 13 மற்றும் 19, 20
முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி - அக்டோபர் அல்லது நவம்பர் 2019

மெயின் தேர்வு:-

மெயின் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியாகும் தேதி - நவம்பர் 2019
மெயின் தேர்வு நடைபெறும் நாள் - நவம்பர் 30, 2019
மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி - டிசம்பர் 2019

நேர்முகத் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியாகும் தேதி - ஜனவரி 2020
நேர்முகத் தேர்வு நடக்கும் தேதி - ஜனவரி / பிப்ரவரி 2020

தகுதியானவர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்படும் தேதி - ஏப்ரல் 2020

கீழ்க்காணும் இணைப்புகளில் தேர்வு தேதிகள் மற்றும் தேர்வுக்கான பாடங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஐபிபிஎஸ் பிஓ 2019 தேர்வு தேதி - https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf?_ga=2.222814680.256091990.1564656884-1684158389.1564377030#page=1

ஐபிபிஎஸ் பிஓ 2019 பாடத்திட்டம் - https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf?_ga=2.8185713.256091990.1564656884-1684158389.1564377030#page=5

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IBPS PO 2019 Notification: Apply Online for 4336 IBPS PO, MTS Recruitment ibps.in, Graduates Eligible
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+