IBPS Clerk Main Admit Card: ஐபிபிஎஸ் கிளார்க் பணி மெயின் தேர்விற்கு நுழைவுச் சீட்டு வெளியீடு!

ஐபிபிஎஸ் (Institute of Banking Personnel Selection-IBPS) தேர்வு வாரியத்தின் சார்பில் வங்கிகளில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு முடிவுற்ற நிலையில் தற்போது மெயின் தேர்விற்கான தே

ஐபிபிஎஸ் (Institute of Banking Personnel Selection-IBPS) தேர்வு வாரியத்தின் சார்பில் வங்கிகளில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு முடிவுற்ற நிலையில் தற்போது மெயின் தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

IBPS Clerk Main Admit Card: ஐபிபிஎஸ் கிளார்க் பணி மெயின் தேர்விற்கு நுழைவுச் சீட்டு வெளியீடு!

ஐபிபிஎஸ் என்னும் வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில் வங்கிகளில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு கடந்த டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில் நடைபெற்று முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. தற்போது, முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக மெயின் தேர்வு நடைபெறவுள்ளது.

IBPS தேர்வு வாரியம் சார்பில் வரும் ஜனவரி 19 ஆம் தேதியன்று நாடு முழுவதும் கிளார்க் பணிக்கான மெயின் தேர்வு நடைபெறவுள்ளது. தற்போது, இத்தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள், தங்களுடைய ஹால் டிக்கெட்டை https://www.ibps.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து ஜனவரி 7 முதல் 19 ஆம் தேதி வரையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஐபிபிஎஸ் கிளார்க் மெயின் தேர்வு

தற்போது நடைபெறவுள்ள கிளார்க் பணிக்கான மெயின் தேர்வானது 190 கேள்விகள் 200 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். 160 நிமிடங்கள் இத்தேர்வு நடைபெறும். தேர்வு நுழைவுச் சீட்டு இல்லாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டில் புகைப்படம், பதிவு எண், தேர்வு மையம் உள்ளிட்ட தகவல்கள் சரியாக உள்ளதா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.

IBPSC Clerk Mains Admit Card 2019 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:-

  • விண்ணப்பதாரர் www.ibps.in என்னும் வங்கி தேர்வு வாரிய இணையதள பக்கத்துக்குச் செல்லவும்.
  • முகப்பு பக்கத்தில் "Click here to Download Online Main Exam Call Letter for CRP Clerks-IX" என்ற லிங்க் இருக்கும். அதனை கிளிக் செய்யவும்.
  • தற்போது, புதிதாக திறக்கப்பட்ட இணைய பக்கத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பதிவு எண், கடவுச் சொல் ஆகியவற்றைப் பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் நேரடியாகத் தேர்வு நுழைவுச் சீட்டைப் பெற இங்கே கிளிக் செய்யலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IBPS Clerk Main Exam admit card 2019-20: Download here ibps.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+