10, 11, 12-வது அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

2018-19 ஆம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை பள்ளிக் கல்வித் துறையால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

10, 11, 12-வது அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

 

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான 10-வது, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வுகள் வரும் டிசம்பர் 10-ம் தேதி தொடங்கி 22-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை

  • 10ம் தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்
  • 11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்
  • 13ம் தேதி (வியாழக்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்
  • 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்
  • 17ம் தேதி (திங்கட்கிழமை) - கணிதம்
  • 18ம் தேதி (செவ்வாய்க்கிழமை) - விருப்ப பாடம்
  • 19ம் தேதி (புதன்கிழமை) - அறிவியல்
  • 22ம் தேதி (சனிக்கிழமை) - சமூக அறிவியல்

11-ம் வகுப்புத் தேர்வு அட்டவணை

  • 10ம் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்
  • 11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்
  • 12ம் தேதி (புதன்கிழமை) - தகவல் தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
  • 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், விலங்கியியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் அண்ட் டைட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (தொழிற்கல்வி).
  • 17ம் தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி.
  • 19ம் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அலுவலக மேலாண்மை மற்றும் செக்கரட்டரிஷிப், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.
  • 22ம் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்.

12-ம் வகுப்புத் தேர்வு அட்டவணை

  • 10ம் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்
  • 11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்
  • 12ம் தேதி (புதன்கிழமை) - தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
  • 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், வணிகவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியியல், நியூட்ரிசியன் அண்ட் டைட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண்மை நடைமுறைகள், நர்சிங் (தொழிற்கல்வி), நர்சிங் (பொது).
  • 17ம் தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளியல், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் மற்றும் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.
  • 19ம் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.
  • 22ம் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

இந்தத் தேர்வுகள் அனைத்தும், காலை 10 மணிக்குத் தொடங்கும். 10 மணியில் இருந்து 10.10 மணி வரை வினாத்தாளைப் படிப்பதற்கும், 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளின் முதல் பக்கத்தை நிரப்புவதற்கும், 10.15 மணி முதல் 12.45 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    English summary
    Half Yearly Exam Dates 2018: SSLC, Plus 1 And 12th
    --Or--
    Select a Field of Study
    Select a Course
    Select UPSC Exam
    Select IBPS Exam
    Select Entrance Exam

    உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
    Tamil Careerindia

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more