பொது அறிவு கேள்விகள் நன்றாக படித்தால் வெற்றி எளிதில் பெறலாம்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படிக்கும் தேர்வர்களே தேர்வு தொடர்பான செய்திகள் எப்போது வேண்டுமானாலும் செவியை எட்டாலாம். தேர்வு தொடர்பான அறிவிப்புகள் வருவதற்கான சாத்தியகூறுகள் அதிகம் தென்படுகிறது ஆகையால் நன்றாக படியுங்கள், புதிதாக தேர்வை அணுகுபவர்கள் கேரியர் இந்தியா தமிழ்தளத்தை அணுகி தேர்வு தொடர்பான குறிப்புகளை வழங்கியுள்ளேன் அதனை பின்ப்பற்றி திட்டமிட்டு படியுங்கள்
தேர்வுக்கு உதவும் கேள்வி பதில்கள் நன்றாக படிக்குமாறு கேட்டுகொள்கிறேன் பொது அறிவு கேள்விகளை உங்களுக்காக தொகுத்துள்ளேன் .

போட்டி தேர்வு எனும் குதிரை பந்தயத்தில் ஓட தயராக இருங்கள்

1 ஆசிரியராக இருந்து பின்னர் குடியரசு தலைவராக பொறுப்பு வகித்தவர்

விடை: டாகடர் ராதாகிருஷணன்

2 மக்களவையின் பெரும்பாண்மை கட்சியின் தலைவர்
விடை: பிரதமர்


3 குடியரசு தலைவர் தேர்தல் குறித்து வழக்குகளில் முடிவெடுப்பது
விடை: உச்சநீதிமன்றம்


4 அமைச்சரவை யாருக்கு கூட்டுபொறுப்பு வாய்ந்தாக உள்ளது
விடை: மக்களவைக்கு

5 ஒரு மசோதா நிதிமசோதாவா இல்லையா என்பதை தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் பெற்றவர்
விடை: சபாநாயகர்


6 முகலாய சக்கரவர்த்தி ஔரங்கசீப் இறப்பு
விடை: 1707


7 செலியூகஸ் நிகேட்டருக்கு சந்திரகுப்த மௌரியருக்கும் இடையே நடைபெற்றது
விடை:செலியூகஸ் - சந்திரகுப்த போர்


8 சட்டமறுப்பு இயக்கத்தின்போது வடமேற்கு பகுதியில் சிகப்பு சட்டைபோராட்டத்திற்கு தலைமையேற்று நடத்தியவர்
விடை: அப்துல்காபார்கான்


9 1946 இடைக்கால அமைச்சரவையில் நிதி மந்திரியாக பணியாற்றியவர்
விடை: லியாகத் அலிகான்


10 இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர்
விடை: அன்னிபெசண்ட்


டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு கடுமையான உழைப்புடன் காலத்தை முறையாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் . வெற்றி வந்தால் பணிவு அவசியம், தோல்வி வந்தால் பொறுமை அவசியம், எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம் எது வந்தாலும் போனாலும் நம்பிக்கை அவசியம் அதனை கைகொண்டு வெல்வோம் வாழ்க்கையின் பயணத்தை எல்லாம் இனிதாகும் என்ற எண்ணம் கொண்டவனுக்கு எதுவும் எளிதே .

சார்ந்த பதிவுகள் : 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் நடப்பு நிகழ்வுகள் தேர்வர்களுக்காக

சீரான வேகம் நிலைத்த் முயற்சி வெற்றிக்கு வழியாகும்

English summary
here article contained gk questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia