டெல்லி பல்கலை.யில் செக்ஷன் ஆபீசர் பணியிடங்கள்!

Posted By:

சென்னை: டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் செக்ஷன் ஆபீஸர் பதவியிடம் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 6 இடங்கள் காலியாகவுள்ளதாகவும், அந்த இடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாகவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

டெல்லி பல்கலை.யில் செக்ஷன் ஆபீசர் பணியிடங்கள்!

வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும் என பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வயது 55-க்குள்ளாக இருக்கவேண்டும். விருப்பம் உள்ளவர்கள் டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணையதளத்துக்குச் சென்று விவரங்களை அறியலாம்.

விண்ணப்பங்களை Registrar, Delhi Technological University, Shahbad Daulatpur, Bawana Road, Delhi-110042 என்ற முகவரிக்கு செப்டம்பர் 29-ம் தேதிக்குள்ளாக அனுப்பவேண்டும்.

1941-ல் உருவாக்கப்பட்ட டெல்லி தழில்நுட்ப பல்கலைக்கழகம், நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தகுந்த ஆட்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியைச் செவ்வனே செய்து வருகிறது.

English summary
Delhi Technological University (DTU), Delhi invited applications for the posts of Section Officer. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 29 September 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia