சிபிஎஸ்இ, நவோதயா உள்ளிட்ட மத்திய அரசிற்கு உட்பட்ட பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் எனில் CTET என்னும் Central Teachers Eligibility Test (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம்.

தற்போது, 2020 ஜூலை மாதம் இதற்கான தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, தேர்விற்கான பாடத்திட்டம், மதிப்பெண், தேர்வு முறை உள்ளிட்ட விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு
நவோதயா, சிபிஎஸ்இ, சைனிக் உள்ளிட்ட மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவதற்கு CTET எனும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். பி.இ, பி.ஏ, பி.எஸ்.சி, எம்ஏ, எம்எஸ்சி உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்புடன், பி.எட் ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் CTET தேர்வில் பங்கேற்கலாம்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு 2020:
தற்போது, 2020 ஆம் கல்வி ஆண்டிற்கான CTET ஆசிரியர் தகுதித் தேர்வு 2020 ஜூலை 5 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி 24 ஆம் தேதி வரையில் நடைபெறும். மேலும், இத்தேர்விற்கான பாடத்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது.
CTET தேர்வு பாடத்திட்டம்
CTET July 2020 தேர்வானது தாள் 1, தாள் 2 என மொத்தம் இரண்டு தாள்களாக நடைபெறும். இவற்றில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரைக்கு ஆசிரியராக விரும்புவோர் தாள் 1 தேர்ச்சி பெற வேண்டும். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள் எடுப்பதற்குத் தாள் 2 தேர்வு தேர்ச்சி பெற வேண்டும். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் உள்ள வகுப்புகளுக்கு ஆசிரியராக வேண்டுமெனில் தாள் 1, தாள் 2 என இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
CBSE CTET தேர்வு அட்டவணை
2020 ஜூலை 5 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள தாள் 1 தேர்வானது காலை 9.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், தாள் 2 தேர்வானது மதியம் 2.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடைபெறும். இரண்டு தாளிற்கான தேர்வும் 2.30 மணி நேரம் நடைபெறும்.
CTET தாள் 1 வினா
CTET தாள் ஒன்றிற்கான வினா அமைப்பானது குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் 1, மொழிப்பாடம் 2, கணிதம், சுற்றுச்சுழல் கல்வி ஆகிய ஐந்து பாடங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இதில், ஒவ்வொரு பாடத்திலிருந்தும், தலா 30 கேள்விகள் வீதம் 1 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். மொத்தம் 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு இடம்பெற்றிருக்கும். இவற்றில் கணிதம், சுற்றுச்சுழல் தவிர மற்ற பாடங்கள் கட்டாயப் பாடமாகும்.
CTET தாள் 2 வினா
CTET தாள் இரண்டிற்கான வினா அமைப்பானது குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் 1, மொழிப்பாடம் 2 ஆகியவற்றிலிருந்து தலா 30 கேள்விகள் மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு இடம்பெற்றிருக்கும். மேலும், கணிதம் மற்றும் அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களிலிருந்து 60 மதிப்பெண்களுக்கு 60 கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 150 கொள் குறி வகை வினாக்கள், 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். விண்ணப்பதாரர்கள் சரியான முறையில் இத்தேர்விற்குத் தயாராகி வெற்றி பெற வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications












