சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுக் கடந்த 2019 டிசம்பர் 21ம் தேதியன்று தேர்வு நடைபெற்றது.
தற்போது இத்தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.centralbankofindia.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் எப்போது நடைபெறும், எங்கு நடைபெறும் உள்ளிட்ட விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய CIB SO Result 2020 தேர்வு முடிவுகளை நேரடியாகக் காண இங்கு க்ளிக் செய்யவும்.
For Daily Alerts