சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு : நாளை துவக்கம்!

நாடு முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கவுள்ளது. இதில், 12.87 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

நாடு முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கவுள்ளது. இதில், 12.87 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு : நாளை துவக்கம்!

நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அனைத்துத் தேர்வுகளும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும்.

நாடு முழுவதும் நடைபெறும் இத்தேர்வில், 21,400 பள்ளிகளைச் சேர்ந்த 12 லட்சத்து 87ஆயிரத்து 359 மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனர். இதற்கென 4,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வினாத்தாள் திருத்துதல், தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், பறக்கும் படையினர் உள்ளிட்ட பொதுத் தேர்வுப் பணிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும் வகையில் இந்தாண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாட்டுக் குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுத்தேர்வு குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவு :

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBSE Date Sheet 2019: Exams from this Friday
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+