அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 2018 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உரிய அதிகாரப்பூர்வ இணையத்தில் இந்த முடிவுகளைக் காணலாம்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 2018 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்வுகள் நடைபெற்று அதற்கான முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அவற்றிற்கான மறுமதிப்பீடு நிறைவுபெற்று இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை காணும் முறை
- அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உரிய "coe1.annauniv.edu" மற்றும் "coe2.annauniv.edu" ஆகிய இணையதளத்தில் உள்நுழையவும்.
- தேர்வரின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியிட்டு உள்நுழையவும்.
- அங்கே தங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
- அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
anna university exam results university education tamilnadu அண்ணா தேர்வு முடிவுகள் மறுமதிப்பீடு பல்கலைக் கழகம் தமிழ்நாடு கல்வி
English summary
Anna University Revaluation Results 2018 : Check Now!


Click it and Unblock the Notifications












