Author : SABARISH file name: TNPSC changes group II main exam pattern, More Detail here browser title : TNPSC changes group II main exam pattern, More Detail here metadescription: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கான பாடத்திட்டம் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புதிதாக பாடத்திட்டம் மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. metakeywords: TNPSC Group 2, TNPSC Group 2 Notification, TNPSC Group 2 2019, TNPSC Group 2 and 2A Syllabus 2019, TNPSC Group 2 & 2A Revised Syllabus, tnpsc group 2 =================== heading: TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்! முழு விபரம் உள்ளே! short headline: TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்! முழு விபரம் உள்ளே! tags: Group 2, Group Exam, TNPSC, UPSC, CAT, Exam, Education, College, University, B.com, India, Job alerts, courses, government jobs, கல்வி, தேர்வு, மதிப்பெண், மாணவர்கள், தேர்வு, இந்தியா, வேலை வாய்ப்பு, அரசு வேலை, டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, கேட், synopsis : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கான பாடத்திட்டம் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புதிதாக பாடத்திட்டம் மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. summary for mobile: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதியன்று குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குரூப் 2 பாடத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பாடத்திட்டத்தின் வினாத்தாள் மாதிரி இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. TNPSC changes group II main exam pattern, More Detail here /=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/= TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்! முழு விபரம் உள்ளே! டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கான பாடத்திட்டம் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புதிதாக பாடத்திட்டம் மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதியன்று குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இதற்கு முன்பாக முதல்நிலைத் தேர்வின் முதல் தாளிலிருந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டுத் திறனறிவு பாடம் புகுத்தப்பட்டது. அவ்வாறு நீக்கப்பட்ட மொழிப்பாடம் பொது அறிவு பகுதியுடன் இணைக்கப்பட்டது. தமிழக அரசு தேர்வுத் துறையின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றியமைத்தற்கான காரணம் குறித்து விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குரூப் 2 பாடத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பாடத்திட்டத்தின் வினாத்தாள் மாதிரி இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முதல்நிலைத் தேர்வு தேர்வு:- முதல்நிலைத் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட்ட புதிய பாடத்தின்படியே இருக்கும். இருப்பினும், எந்த பகுதியிலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்னும் தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் VIII, IX ஆகியவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். முதன்மை தேர்வு ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மை எழுத்துத் தேர்வு தற்போது இரண்டு தேர்வுகள் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றில் தாள் 1 பட்டப்படிப்பிலிருந்து பத்தாம் வகுப்பு தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தாள் 2 பட்டப்படிப்பு தரத்தில் உள்ளது. மிகமிக முக்கியமாகத் தாள் 1 ல் குறைந்தது 25 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தாள் 2 மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tnpsc.gov.in/press/2019_Press_Release_Gr_II_IIA_Main_Revised21102019.pdf