யுபிஎஸ்சி என்று அழைக்கப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலம் 1,056 குரூப் ஏ ஆபீஸர் காலியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களைப் பெற https://upsconline.nic.in/upsc/OTRP/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.
மத்திய அரசின் Group A officers பதவிக்கென நடத்தப்படும் UPSC Civil Service Examination 2024 தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று (14.02.2024) முதல் இணையவழி மூலம் பெறப்பட்டு வருவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி இந்தத் தேர்வுக்காக மொத்தமாக 1056 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறலாம்.
யுபிஎஸ்சி (UPSC) தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தும் Civil Service Examination மூலம் மத்திய அரசின் Group A பிரிவின் கீழ்வரும் பதவிகளான IAS, IFS, IPS, IAAS, ICAS, ICLS போன்றவற்றுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இந்த வகையில் இவ்வாண்டு நடைபெறவுள்ள UPSC CSE 2024 தேர்வுக்கான அறிவிப்பானது இன்று (14.02.2024) வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்தத் தேர்வுக்காகக் காத்திருந்தவர்கள் மகிழ்ச்சிக் கடலில் நீந்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள UPSC CSE தேர்வுக்கென 1056 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி பணியிடங்களுக்கான வயது வரம்பு:
UPSC CSE தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.08.2024 அன்றைய தினத்தின் படி, 21 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 02.08.1992 அன்றைய நாள் முதல் 01.08.2003 என்ற நாளுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
யுபிஎஸ்சி பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி வாரியங்களில் பட்டப்படிப்பு (Graduate Degree) தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
யுபிஎஸ்சி பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம்:
இந்தத் தேர்வு எழுதும் பெண்கள், எஸ்சி, எஸ்டி (Female / SC / ST / Female) ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
மற்ற நபர்கள் - ரூ.100/ விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டும்.

யுபிஎஸ்சி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் முறை:
UPSC Civil Service Preliminary Examination 2024 (Objective Type)
UPSC Civil Service Main Examination 2024 (Written and Interview/Personality Test) ஆகிய முறைகளில் தேர்வு நடைபெறும்.
யுபிஎஸ்சி பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை:
இந்த யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 14.02.2024 அன்று முதல் 05.03.2024 அன்று வரை https://upsconline.nic.in/upsc/OTRP/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களைப் பெற https://upsconline.nic.in/upsc/OTRP/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.
விளம்பரத்தைத் டவுன்லோடு செய்ய...:
யுபிஎஸ்சி அறிவிப்பின் விளம்பரத்தைத் டவுன்லோடு செய்ய https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-24-engl-140224.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












