உதய்பூரில் உள்ள உயர்கல்வி நிறுவனமான இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) பிஎச்.டி படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு www.iimu.ac.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
உதய்பூர் ஐஐஎம்-ல் பிஎச்.டி படிப்பு படிப்பதற்கான கால அளவு 5 ஆண்டுகள் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
உதய்பூர் ஐஐஎம்-ல் பிஎச்.டி படிக்க மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது எம்.பில்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்புடன் சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எஸ்., போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அதேபோல், 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் 75 சதவீத மதிப்பெண் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:
உதய்பூர் ஐஐஎம்-ல் பிஎச்.டி படிப்பு படிக்க கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் நகல், புகைப்படம், முகவரி சான்று, 10ம் வகுப்பு சான்றிதழ், 12ம் வகுப்பு சான்றிதழ், மற்றும் உரிய கல்வி சான்று நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
சேர்க்கை முறை:
இந்தப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
கேட், ஜிமேட், ஜி.ஆர்.இ., நெட்- ஜே.ஆர்.எப்., போன்ற நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்காணலின் மூலம் சேர்க்கை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை:
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை. மேலும், மாதம் ரூ.30 ஆயிரம் முதல் உதவித்தொகை உட்பட பல்வேறு சலுகைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
உதய்பூர் ஐஐஎம்-ல் பிஎச்.டி படிப்பு படிப்பதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 9-ம் தேதியாகும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு www.iimu.ac.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












