ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு 1,768 பணியிடங்களுக்கு அப்ளை செய்யுங்க....!!!

ஆசிரியர் தேர்வு வாரியம், தற்போது 1768 பணியிடங்கள் கொண்ட இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு பிப்ரவரி 14 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1768 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மார்ச் 15-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. இந்தநிலையில், தற்காலிக ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவதற்கான அரசாணை எண் 149, கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது. இந்த தாமதம் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.

இதனால், பல ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இந்நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ நேரடி நியமனம்‌ மூலம்‌ இடைநிலை ஆசிரியர்‌ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு 1,768 பணியிடங்களுக்கு அப்ளை செய்யுங்க....!!!

வயது வரம்புத்தகுதி

இந்தப் பணியிடங்களுக்கு பொதுப் பிரிவினருக்கு: அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம்.

எஸ்சி, எஸ்டி, பிசி பிரிவினர், பிசி முஸ்லிம்கள், எம்பிசி பிரிவினருக்கு - அதிகபட்சம் 58 வயது வரை இருக்கலாம்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதி

* ஆசிரியர்களுக்கான பி.எட். அல்லது டி.டிஎட் அல்லது அதற்கு இணையான படிப்புகளை படித்திருக்கவேண்டும்.

* தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

தேர்வு முறை

* கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

* எழுத்துத் தேர்வு

* சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

10வது வகுப்பு/ எஸ்.எஸ்.எல்.சி.

12வது வகுப்பு/ மேல்நிலைப் படிப்பு/ டிப்ளமோ அல்லது அதற்கு இணையான படிப்பு.

ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ / தொடக்கக் கல்வியில் டிப்ளமோ / டிப்ளமோ (சிறப்புக் கல்வி)
பட்டப்படிப்புச் சான்றிதழ் அல்லது தற்காலிகச் சான்றிதழ்

இளநிலை பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் (TNTET) - தாள் I

சமூக சான்றிதழ்

தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் (PSTM) சான்றிதழ்

ஊனமுற்றோர் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

* இடைநிலை ஆசிரியர் பணி இடங்களுக்கான தேர்வுகளுக்கு https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.

* லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு, விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, காலி இடங்கள், வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவை குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய அறிவிக்கையை https://www.trb.tn.gov.in/admin/pdf/994791851SGT Notification - 2024.pdf என்ற இணைப்பில் காணலாம்.

ஊதியம்:

அரசு அனுமதி பெற்று இயங்கும் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor's Degree / Master Degree மற்றும் B.Ed தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.63,010/- வரை ஊதியம் வழங்கப்படும்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited for Direct Recruitment for the post of SECONDARY GRADE TEACHERS in the Special Rules for the Tamil Nadu Elementary Educational Subordinate Service for the year 2023-2024 from the eligible candidates of Tamil Nadu only through Online mode up to 5.00 p.m. on 15.03.2024. The Candidates applying for the post of SECONDARY GRADE TEACHERS should possess a valid Tamil Nadu Teachers Eligibility Test Certificate (TNTET - Paper– I).
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+