மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அடுத்து, கலை, அறிவியல் படிப்புகளுக்கு 'சீட்' கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும். தொழில்நுட்ப படிப்புகளை தேர்வு செய்ய விரும்பாத மாணவ, மாணவிகளின் அடுத்த சாய்ஸ் கலை, அறிவியல் படிப்புகள் தான்.
அந்த மாணவர்கள், தங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு எப்போது வரும் என காத்திருப்பர். அவர்களுக்கான அறிவிப்பை, மாநில உயர்க்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர, மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, மே 8ஆம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளது.
இதற்கு மாணவர்கள் https://tngasa.org/ மற்றும் https://tngasa.in/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் மே 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும், அனைத்து மையங்களிலும் போதியளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டண விவரம்
ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும்
விண்ணப்பக் கட்டணம் - ரூ.48/-
பதிவுக் கட்டணம் - ரூ.2/-
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு- விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை
பதிவுக் கட்டணம் - ரூ.2/- மட்டும்
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Credit Card/ Debit Card/ Net Banking வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai - 6" என்ற பெயரில், மே 8 அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாக செலுத்தலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் -
08.08.2023
விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் -
19.06.2023
கூடுதல் தகவல்களுக்கு
தொடர்பு எண் : 1800 426 0110


Click it and Unblock the Notifications












