தமிழகத்தில் 2023-24-ம் கல்வியாண்டில், முதலாமாண்டு B.E., B.Tech., B.Arch பட்டப்படிப்பிற்கு சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் மே.5 முதல் துவங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே.8 ஆம் தேதி வெளியாகவுள்ளன. இதையடுத்து, B.E., B.Tech, B.Arch பட்டப்படிப்பிற்கு அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2023- 24 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை விண்ணப்ப செயல்முறை துவங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை
மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏதுவாக, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் - TNEA Facilitation Centers (TFCs) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.
மறக்காதீங்க...!
விண்ணப்பம் பதிவு துவங்கும் நாள்: 05.05.2023
பதிவு நிறைவடையும் நாள்: 04.06.2023
பதிவுக் கட்டணம்
பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் டெபிட் கார்டு / Credit Card / நெட் பேங்க்கிங் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள், " "The Secretary TNEA" payable at Chennai.. என்ற பெயரில் 05.05.2023 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
கட்டண விபரம்
கட்டணம்- ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி- ரூ.500
எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி- ரூ.250.
கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்காணும் இணையதளங்கள் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் இணையதளம் வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும்போதே, அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
அசல் சான்றிதழ்களை இணையதள வாயிலாக சரிபார்க்கும்போது எதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அந்த குறிப்பிட்ட மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
குறிப்பிட்ட தேதி, நேரத்தில் டிஎஃப்சி மையத்திற்கு நேரடியாக வந்து, மாணவர்கள் தங்கள் விபரங்களை சரிசெய்ய வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேரடியாக நடைபெறும்.
பி.இ./ பி.டெக். (Lateral Entry and Part Time) பட்டப் படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
தொடர்பு எண்: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்: 1800 - 425 - 0110
இ- மெயில் முகவரி: [email protected]


Click it and Unblock the Notifications












