ஆடை வடிவமைப்புக்கான தேசிய கல்விக்கழகத்தின் (நிஃப்ட்) மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் டிசம்பர் 28ம் தேதிக்குள் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அந்நிறுவன இயக்குநர் அனிதா மனோகர் தெரிவித்துள்ளார்.

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிஃப்ட் கல்வி நிறுவன வளாகம், ராஜீவ் காந்தி சாலை அருகே, சென்னை தரமணியில் உள்ளது. இந்நிறுவனத்தில் பி.டி.இ.எஸ்., பி.எஃப்.டெக் உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகளுக்கும், எம்.டி.இ.எஸ். எம்.எஃப்.எம், எம்.எஃப்.டெக் உள்ளிட்ட பட்டமேற்படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் டிசம்பர் 28ம் தேதிக்குள் www.nift.ac.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary
NIFT Chennai Starts Admissions: Dec 28 Last Date
Story first published: Thursday, December 20, 2018, 12:00 [IST]


Click it and Unblock the Notifications












