சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு வரும் ஏப்ரல் 22ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சென்னை பல்கலைக் கழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான எம்ஏ, எம்காம், எம்எஸ்சி உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளுக்கும், சில பட்டயப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை, வரும் ஏப்ரல் 22-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முதுநிலை மற்றும் எம்.பில் பட்டப் படிப்புகளுக்கு ஜூன் 17 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
முதுநிலை பட்டயப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கும், கூடுதல் தகவல்களுக்கும் www.unom.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் தொடர்புகொள்ள வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












