மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் பல்வேறு வகையிலான முதுகலை பட்டமேற்படிப்புகளில் சேர ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் www.unom.ac.in என்ற இணையதளத்தை அணுகி விரிவாக அறிந்துகொள்ளலாம்.

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள மிகப் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. இது 1851-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவிலேயே உள்ள மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று என்ற சிறப்புப் பெருமையைப் பெற்றுள்ளது. லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டு பெருமை பெற்றதாக அமைந்துள்ளது.

ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!

தொடக்கத்தில் இந்த பல்கலை.யில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலமாக தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன.

தற்போது கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பிரிவுகள் இங்கு இயங்கி வருகின்றன. மேலும் தன்னாட்சிக் கல்லூரிகளை முதல் முறையாகத் தொடங்கியது சென்னை பல்கலைக்கழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இப்பல்கலைக்கழகம், மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டதாக செயல்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

சென்னை பல்கலைக்கழகம் பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகள், முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
இந்த படிப்புகளில் ஆண்டுதோறும் ஏராளமான மாணவ, மாணவிகள் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்நிலையில் வரும் கல்வி ஆண்டில் (2024-25-ம் கல்வியாண்டு) இந்த வகையான படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 15-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகளின் விவரம், அந்த படிப்புகளுக்கான கல்வித்தகுதி, வயதுத்தகுதி, கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை நடைமுறை உள்ளிட்ட இதர தகவல்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விரிவாக உள்ளது. இந்த விவரங்களை மாணவர்கள் www.unom.ac.in என்ற இணையதளத்தை அணுகி விரிவாக அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The University of Madras (UoM) has invites applications form students for PG Courses and Diplomo Courses. For more details aspirants can login into www.unom.ac.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+