மத்திய அரசின் சார்பில் பி.எட், எம்.எட் படிப்புகளுக்கு இணையான கேந்திரிய ஹிந்தி சனஸ்தான் கல்விக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் ஆர்வமும், தகுதியும் உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய ஹிந்தி சனஸ்தான் கல்வி நிறுவனத்திலிருந்து 2020-22 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஹிந்தி சிக்ஷான் நிஷ்ண்ட், ஹிந்தி சிக்ஷான் பரங்கத், ஹிந்தி சிக்ஷான் பிரவீன் உள்ளிட்ட படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இவற்றில், எம்.எட் (M.Ed) படிப்புக்கு இணையான ஹிந்தி சிக்ஷான் நிஷ்ண்ட் துறையில் மொத்தம் 44 இடங்கள் உள்ளது. B.Ed/L.T முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஹிந்தி சிக்ஷான் பரங்கத்தில் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருத்தல் கட்டாயம்.
பி.எட் (B.Ed) படிப்புக்கு இணையான ஷிந்தி சிக்ஷான் பரங்கத் படிப்பிற்கு என 44 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சேர விரும்புவோர் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பி.ஏ. ஹந்தி முடித்திருத்தல் வேண்டும். அல்லது, ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பும், ஹிந்தி இன்டெர்மீடியேட் தகுதி அல்லது ஹிந்தி டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் சேர மே 24ம் தேதியன்று நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.khsindia.org என்னும் இணையதளத்தில் பிப்ரவரி 20ம் தேதி முதல் விண்ணப்பம் பெற்று, மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












