எலக்டிரானிக்ஸ் எலக்டிரக்கல் படிப்பவர்களுக்கு அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்பிற்கு உதவும் தொலைதொடர்பு படிப்புகள்

By Sobana

தொலைதொடர்பு சாதனங்கள் வேலைவாய்ப்பின் முக்கிய அங்கமாக திகழ்கிறது . தொலைதொடர்பு சாதனங்களின் பயன்பாடு இருபது வருடங்களுக்கு முன்பு நினைத்த அளவில் இல்லை ஆனால் தற்பொழுது நிலைமை வேறு , தொலை தொடர்பு சாதனமாக நமக்கு தெரிந்து முதன் முதலில் தொலை பேசி மற்றும் தொலைக்காட்சி 20 வருடங்களுக்கு முன்பு நமக்கு தெரிந்த தகவல் தொடர்பு சாதனமாக இருந்தது .

தொலைதொடர்பு சார்ந்த படிப்புகளை படிப்பவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும்

இன்றைய நிலையில் தொலைதொடர்பு சாதனங்கள் மிகபெரிய அளவில் மக்களை ஆழ்கின்றது . இணையம் என்பது ஆரம்ப காலத்தில் சாதரண மனிதனை சென்று அடைந்த நிலைக்கும் இன்று அதன் போக்கும் மாறுப்பட்டுள்ளது .
இன்றைய நிலையில் தொலைதொடர்பு சாதனம் , இணையம் கற்பனையை தாண்டி மக்களுடன் புழகத்தில் உள்ளது . வேலைவாய்ப்புகள் தொலை தொடர்பு சாதனங்களின் மூலம் உடனுக்குடன் தேவைப்படுவோர்களை சென்றடைகின்றது .

நாட்டின் நடப்புகளை உடனுக்குடன் அறிவிக்கும் சாதனங்களாக உள்ளன. தொலைதொடர்பு சாதனங்களின் தேவை எந்த அளவிற்கு அதிகரிக்கின்றதோ அந்த அளவிற்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் .

தொலை தொடர்பு சாதனமும் , வேலை வாய்ப்பும் :

அதிகரித்துவரும் தொலைதொடர்பு சாதனங்களினால் வேலை வாய்ப்பு அதிகரிக்கின்றது . வேலைவாய்ப்பு 2018 ஆம் ஆண்டு 30 லட்சம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் 3ஜியை தாண்டி , 4ஜியில் பயணிக்கும் இவ்வேளையில் வேலை செய்ய தொதிழில்நுட்பம் அறிந்தவர்களின் தேவை அதிகரித்து வேலைவாய்ப்பு அதிகரிக்கும் .

5ஜியை அடையும் நிலையில் வேலை வாய்ப்பு பெருக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுகருத்து இல்லை .

தொலைதொடர்பு சாதனத்தின் வீக்கத்தால் வெப் டெவலபர்கள் தேவை அதிகரிக்கும் .
அப்பிளிகேஷன் டெவலப்பர்களின் தேவையும் அதிகரிக்கும் .
தொலை தொடர்பு சாதனங்களின் அடிப்படை கட்டமைப்புகளை அதிகரிக்கும் முக்கிய வல்லுநர்களின் தேவை அதிகரித்து காணப்படும்
மொபைல் பயன்படுத்துவோர்களின் நுட்ப வசதியை அதிகரிக்கவும் வல்லுநர்கள் தேவை அதிகரிக்கும் .
சைபர் செக்கியூரிட்டி என்பது தொலைதொடர்பு சாதனங்களின் பாதுகாப்பு அவசியமான ஒன்றாகும் அதற்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்

தொலைதொடர்பு படிப்புகள் :

டெலிகம்யூனிகேசன் படிப்புகள் பொறியியல் துறையில் அதிகரித்து காணப்படுகின்றது . பொறியியல் படிப்புகளான எலக்டிரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பு படித்தவர்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கும் .

எலக்டிரானிக் படிப்புகள் தரமானதாக வழங்கும் கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து படிப்புடன் , செய்முறை பயிற்சி வழங்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் படிப்புடன் கல்லுரிக்கு வெளியே பயிற்சி செய்ய வாய்ப்புகள் வழங்கும் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் படிக்கலாம் .
இந்தியாவின் சிறந்த கல்லுரிகள் விவரம் இணைக்கப்படுகின்றது மாணவர்கள் அறிந்துகொள்ளுங்கள் .

Amity university ,Noida UP

NMIMS, Mukesh Patel School of Technology Management & Engineering

Alva's Institute of Engineering and Technology ,Mangalore

The Northcap University

Abdul Kalam Institute of Technological Sciences, AP

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about career opportunities in Telecommunication studies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X