மெட்ராஸ் ஐஐடியில் பெல்லோஷிப் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...!

மெட்ராஸ் ஐஐடி என்று அழைக்கப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (IIT Madras) கோடைகால பெல்லோஷிப் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பெல்லோஷிப் திட்டத்துக்கு அதிகாரப்பூர்வ ஐ.ஐ.டி மெட்ராஸ் இணையதளமான https://sfp.iitm.ac.in -ல் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும், ஐ.ஐ.டி மெட்ராஸ் சம்மர் பெல்லோஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க மார்ச் 31 மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஐ.ஐ.டி மெட்ராஸின் இந்த கோடைகால பெல்லோஷிப் என்பது 2 மாத கால திட்டமாகும், இது மே 22-ம் தேதி தொடங்கி ஜூலை 21, 2024 -ல் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாணவர்களின் வசதிக்கு ஏற்ப அட்டவணை விருப்பமானதாக இருக்கலாம் என்று நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

மெட்ராஸ் ஐஐடியில் பெல்லோஷிப் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...!

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அதிகபட்சமாக 2 மாதங்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.6000 வழங்கப்படும்.

ஐ.ஐ.டி மாணவர்கள் இந்த கோடைக்கால பெல்லோஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

BE/ BTech/ BSc (பொறியியல்) மூன்றாம் ஆண்டு அல்லது ஒருங்கிணைந்த ME/ MTech திட்டத்தின் மூன்றாம் அல்லது நான்காம் ஆண்டு, ME/ MTech/ MSc/ MA, MBA முதலாம் ஆண்டு பயிலும், பல்கலைக்கழகத் தேர்வுகளில் உயர் தரவரிசைகளின் அடிப்படையில் சிறந்த கல்விப் பின்புலம் கொண்ட விண்ணப்பதாரர்கள் கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட தாள்கள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், பங்கேற்ற வடிவமைப்புப் போட்டிகள், கணித ஒலிம்பியாடில் மதிப்பெண்/ ரேங்க் மற்றும் பெறப்பட்ட வேறு ஏதேனும் விருதுகள்/வேறுபாடுகள் உட்பட அவர்களின் கல்வி செயல்திறன் மற்றும் சாதனைகளை முன்னிலைப்படுத்தி விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இந்த கோடைகால பெல்லோஷிப் திட்டத்தில் பங்கேற்கும் பொறியியல் துறைகள்: ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங், பயோ டெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங், இன்ஜினியரிங் டிசைன், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உலோகவியல் & பொருட்கள் பொறியியல் மற்றும் கடல் பொறியியல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி:

தகுதியும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பெல்லோஷிப் திட்டத்துக்கு அதிகாரப்பூர்வ ஐ.ஐ.டி மெட்ராஸ் இணையதளமான https://sfp.iitm.ac.in -ல் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Indian Institute of Technology, Madras (IIT M) is inviting applications for its summer fellowship programme. Interested candidates can apply for the fellowship programme at the official IIT Madras website — sfp.iitm.ac.in. Candidates will have time till 5 pm of March 31 to apply for the IIT Madras summer fellowship programme. This summer fellowship by IIT Madras is a two-month-long programme that will begin on May 22 and conclude on July 21, 2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+