பாலிடெக்னிக்குகளில் டிப்ளமோ படிக்கப் போறீங்களா...அப்படி இந்தச் செய்தி உங்களுக்குத்தான்...!!

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் மே 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு செய்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற மாணவர்கள் https://www.tnpoly.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

பாலிடெக்னிக், டிப்ளமோ படிப்பு, 10 -ம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களிடையே பரவலாகவும் பிரபலமாகவும் உள்ளது. பாலிடெக்னிக், பொதுவாக, 10 -ம் வகுப்பை முடித்த பிறகு 2 அல்லது 3 ஆண்டுகளில் முடிக்கக்கூடிய பொறியியல் டிப்ளமோ திட்டமாகும். பாலிடெக்னிக் டிப்ளமோ என்பது பி.டெக் (தொழில்நுட்ப இளங்கலை) அல்லது பிஇ (இளங்கலை பொறியியல்) பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான ஒரு வாசலாக அமைந்துள்ளது.

பாலிடெக்னிக்குகளில் டிப்ளமோ படிக்கப் போறீங்களா...அப்படி இந்தச் செய்தி உங்களுக்குத்தான்...!!

பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் நன்மை என்னவென்றால், அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் துறையில் ஆழமான தகவல்களையும் அறிவையும் பெற முடியும். மேலும் அதேதுறையில் கூடுதல் படிப்புக்கான பாதை அவர்களுக்குத் திறந்தே உள்ளது, மேலும் அவர்கள் விரும்பினால் பட்டப்படிப்பைத் தொடரலாம், இது அவர்களின் தொழில்முறைத் தகுதிகளைச் சேர்க்கும்.

தமிழகத்தில் டிப்ளமோ படிப்பு பயில ஏராளமான பாலிடெக்னிக்குகள் உள்ளன. தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் ஆகியவை மிகச் சிறப்பாக அமைந்து டிப்ளமோ படிப்புகளை பயிற்றுவித்து வருகின்றன.
இவற்றில் தொழில்நுட்ப பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்காக மட்டும் 19,530 இடங்கள் உள்ளன. இந்நிலையில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பப் பதிவு மே 10 தொடங்கி மே 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையடுத்து விருப்பமும், ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் https://www.tnpoly.in/ எனும் இணையத்தளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2 வகுப்பில் வெற்றி பெற்றவர்கள் நேரடி 2-ம் ஆண்டு படிப்பில் சேர முடியும். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். விண்ணப்பித்த மாணவர்களில் தகுதி பெற்றவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
அதுமட்டுமல்லாமல், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையத்ளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The DoTE of Tamil Nadu has opened the window for registration for Diploma course admissions in 57 Government Autonomous Polytechnic colleges of the state. The total intake for the first year in the TN Polytechnic Diploma Admissions is 19530.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+