யு. கே. (UK) பல்கலைக்கழகங்களில் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்கள் காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன், தேர்ந்தெடுக்கப்பட்ட யு.கே. பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் முழு நேர முதுகலை பட்டப்படிப்பை,இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வாகும் மாணவர்கள் இலவசமாக மேற்கொள்ள முடியும்.
எந்தெந்த துறைகள்
வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதார அமைப்புகள் மற்றும் திறனை வலுப்படுத்துதல், உலகளாவிய செழிப்பை ஊக்குவித்தல், உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், திறனை வலுப்படுத்துதல் மற்றும் நெருக்கடிகளை சமாளித்தல் உள்ளிட்ட துறைகளின் கீழ் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் யார்?
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
யு.கே. கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள உரிய தகுதி பெற்றவராக இருப்பதுடன் செப்டம்பர் / அக்டோபர் 2024 -ல் படிப்புக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
செப்டம்பர் 2023க்குள் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் எடுத்து இளநிலை பட்டப்படிப்பு பெற்றவராக இருக்க வேண்டும். யு.கே. முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு, சி.எஸ்.சி. நிதி அளிப்பதில்லை. எனினும், அதன் அவசியம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். எம்.பி.ஏ. படிப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுவதில்லை.
நாடு: இங்கிலாந்து
உதவித்தொகை பெயர்: காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன்
யார் விண்ணப்பிக்கலாம்: மாஸ்டர் மற்றும் பிஎச்டி
நிதி : முழு நிதியுதவி
காமன்வெல்த் முதுநிலை உதவித்தொகைக்கான காலக்கெடு:
அக்டோபர் 17, 2023 அன்று 17:00 மணி நேரம்
காமன்வெல்த் PhD உதவித்தொகைக்கான காலக்கெடு: அக்டோபர் 17, 2023 நேரம் 17:00 மணி.
விண்ணப்பிக்கும் முறை
காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷனின் https://fs29.formsite.com/m3nCYq/omxnv2g3ix/index என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை க்ளிக் செய்து ஆன்லைன் விண்ணப்பபதோடு, இந்திய கல்வி அமைச்சகத்தின் https://proposal.sakshat.ac.in/scholarship/- எனும் சாக்சாத் இணையதளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் - 17.10.2023
இந்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளம் வாயிலாக நவம்பர் 25 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க: https://www.education.gov.in/higher_education
தகுதியானவர்களுக்கு கிடைக்கப்பெறும் வசதிகள்:
Ø Return Air Ticket
Ø Covers Full Tuition Fee
Ø Monthly stipend of £1,347 per month, or £1,652 per month.
Ø Also covers the warm clothes allowance.
Ø Thesis Allowance
Ø Additional Study Travel Grants
Ø If the candidates are widowed, divorced, or single parents, the scholarship pays the child £576.61 for the first child and £143 per month for the second and third child under the age of 16.
Ø Additional allowance for a disabled person.
மேற்குறிப்பிட்டவை ஒவ்வொரு கல்வி உதவித்தொகைக்கு தேர்வானவர்களுக்கு கிடைக்கப்பெறும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட இதர ஆவணங்கள் குறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளவும்.


Click it and Unblock the Notifications












