கடல்சார் பல்கலைக்கழகத்தில் படிக்க அவகாசம் நீட்டிப்பு..!!

சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில் சிறப்பான கடல்சார் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த சிறப்புவாய்ந்த கடல்சார் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களைப் பெற www.imu.edu.in என்ற இணையதள முகவரியை மாணவச் செல்வங்கள் அணுகலாம்.

ஐஎம்யு என்று அழைக்கப்படும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) சிறப்பான முறையில் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவில் நேரடியாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பொது மத்திய பல்கலைக்கழகம் ஆகும்.
இது கடல் தொடர்பான பரந்த அளவிலான பல்வேறு படிப்புகளைக் கையாள்கிறது, கடலியல் முதல் கடல்சார் சட்டம் மற்றும் வரலாறு வரை, மேலும் கடலில் தேடுதல் மற்றும் மீட்பு மற்றும் ஆபத்தான பொருட்களின் போக்குவரத்து போன்ற நடைமுறை தலைப்புகள் பல்வேறு பிரிவுகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

கடல்சார் பல்கலைக்கழகத்தில் படிக்க அவகாசம் நீட்டிப்பு..!!

மேலும், இது வணிக கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்தியாவின் மதிப்புமிக்க தேசிய உயர்கல்வி நிறுவனம் ஆகும்.

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐஎம்யுசிஇடி( IMUCET) நுழைவுத் தேர்வின் மூலம் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் (IMU) சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த உயர்கல்வி நிறுவனமானது, இந்திய கடல்சார் பல்கலைக்கழக சட்டம் 2008, 14 நவம்பர் 2008-ன் கீழ் நிறுவப்பட்டது.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) நிறுவப்படுவதற்கு முன்பு, மத்திய கப்பல் அமைச்சகத்தின் கீழ் ஏழு புகழ்பெற்ற கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இருந்தன. இந்த உயர்கல்வி நிறுவனங்கள் 2008-ல் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் (IMU) கீழ் இணைக்கப்பட்டன.

இந்த சிறப்புவாய்ந்த இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) சென்னை உத்தண்டியில் மிகச் சிறப்பான முறையில் அமைந்து செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது பி.டெக். மரைன் இன்ஜினீயரிங், நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஷிப் பில்டிங், ஓஷன் இன்ஜினீயரிங், பிபிஏ லாஜிஸ்டிக்ஸ் மற்றும் இ-காமர்ஸ், மேரிடைம் லாஜிஸ்டிக்ஸ், பிஎஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ் ஆகிய இளங்கலை பட்டப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இங்கு 2024-25 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந் மே 5-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மே 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புவாய்ந்த கடல்சார் படிப்புகளில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் இணையதளம் (www.imu.edu.in) மூலம் மே 10-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Maritime University (IMU), East Coast Road, Semmencherry, Chennai, Tamil Nadu - 600119, has extended the last date for submission of applications for admission to various Undergraduate and Postgraduate Programs at Chennai, Kochi, Kolkata, Mumbai Port, Navi Mumbai and Visakhapatnam campuses of IMU for the academic year 2024-25.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+