வார்த்தையை காதலியுங்கள் வெற்றி உங்களை பின் தொடரும்!


நம் பணியாற்றும் இடத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளை பற்றி என்றைக்காவது யோசித்துள்ளீர்களா? நம் பணியிடத்தில் பயன்படுத்தும் வார்த்தைகள், நம் பணிக்கும், சக ஊழியர்களுக்கும் எவ்வாறு பக்கபலமாக இருக்கும் தெரியுமா?

சிறு விஷயங்களை கூட நேர்மறையான வார்த்தைகளால் அணுக கற்றுக்கொள்ளும் போது நம் இலக்கை எட்டுவதற்கான இடைவெளி குறைவதோடு, நம் மதிப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

1. இது என் வேலை இல்லை:

அச்சச்சோ! 'இது என் வேலை இல்லை' போன்ற வார்த்தைகளை அலுவலகத்தில் அடிக்கடி பயன்படுத்துகிறீர்களா? அப்படி என்றால் வேறு ஒரு நிறுவனத்தை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கியுள்ளீர்கள் என்று அர்த்தம்.

இந்த பணி உங்களுக்கு வெளிப்படையாகவே, மறைமுகமாகவே ஒதுக்கப்பட்டிருக்கலாம். இதை எப்படி அணுக வேண்டும் என்பது அவசியம்.

எந்த ஒரு கேள்வியாக இருந்தாலும் பொறுமையாக கையாள்வது மிக மிக அவசியம். தற்போது கொஞ்சம் வேலை இருக்கிறது. சிறிது நேரம் கழித்து செய்து தருகிறேன் என்று கூறலாம். எப்போதும் உங்களை பிடிவாதமான ஆளாக கட்டிக்கொள்ளாதீர்கள். இது உங்களை சக ஊழியர்களிடம் இருந்து பிரிக்க வழிவகுத்துவிடும்.

2. ஒரு நிமிடத்தில் உங்களை சந்திக்கிறேன்:

அலுவலகத்தில் டெட் லைன் என்பது அனைவருக்கும் பொதுவானது. கடைசி நேரத்தில்தான் பல்வேறு பிரச்னைகள் வரும். இதை எவ்வாறு லாவகமாக கையாள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் சாதுர்த்தியம்.

பொதுவாக கடைசி நேரத்தில் யாராவது உங்களிடம் வேலையை ஒப்படைத்தால் முகத்தை சுழிக்காமல், முடித்து கொடுக்கிறேன். ஆனால் எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும். இப்படி மட்டும் கூறிப்பாருங்கள் அப்புறம் நீங்கள் தான் ஆபிஸ் ஹூரோ.

3. நான் உறுதியாக நம்புகிறேன்:

முழுவதுமாக சொதப்பிய வேலை ஒன்று கடைசி தீர்வுக்காக உங்களிடம் வருகிறது. முன்பாக இந்த வேலையால் அந்த ஊழியர் மன உளைச்சலில் இருப்பார். இந்த சமயத்தில் நீங்கள் அவரை பார்த்து கடிந்து கொள்ளும் போது இது மன உளைச்சலை மேலும் அதிகப்படுத்தும்.

இதை எவ்வாறு அணுகலாம். இதற்கு முன் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்ததுண்டு, கவலைப்படாதீர்கள் இதற்கான தீர்வை விரைவில் எட்டிவிடலாம்.

நான் உறுதியாக நம்புகிறேன். போன்ற நம்பிக்கையான வார்த்தைகளை பிரயோகிக்கலாம். அதே சமயம் நம்மிடம் வந்துள்ள வேலை குறித்த கேள்வியை வெளிப்படையாக முன்வைக்கும் போது இதற்கான தீர்வை எளிமையாக்கலாம்.

4. எல்லாம் எனக்கு தெரியும்?

'எல்லாம் எனக்கு தெரியும்' இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறீர்களா? ஒரு வேலை உண்மையாகவே அந்த வேலை உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கலாம். நீங்கள் அந்த வேலையில் அனுபவசாலியாக இருக்கலாம். அதற்காக சக ஊழியர்கள் முகம் சுழிக்கும் வகையிலான வார்தைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம்.

ஒப்புக்கொள்வதற்கும், உப்புக்கு சப்பாக ஒப்புக்கொள்வதற்கும் நீண்ட வித்தியாசங்கள் உண்டு.

இந்த வேலையை இப்படிச் செய்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என சிலர் புரியவைக்க முற்பட்டால் தட்டாதீர்கள். உங்களுக்கும் நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பங்கு உண்டு என்பதை மறவாதீர்கள்.

5. மதிப்பை உறுதிபடுத்துவது:

அலுவலகத்தில் மற்றவர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதற்கும், நமக்கான முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கும் இடையே உள்ளது மெல்லிய கோடுதான். இதில் கவனமாக இருக்க வேண்டும்.

விளையாட்டுக்கு பேசுவதை எல்லாம் அரசியலாக்குவது, பழிவாங்கும் நோக்கில் செயல்படுவது நமக்கும், நிறுவனத்துக்கும் நல்லதல்ல. 

ஒரு குறிப்பிட்ட வேலைக்கான திட்டமிடலில் முன்னதாக பிரச்னை இருந்தால், அதை வரும் முன் கருத்தில் கொண்டு அதற்கான விடை காண்பது உங்களை உயர் பதவிகளுக்கு அழைத்துச்செல்லும்.

சென்னையில் டெஸ்க் டாப் சப்போர்ட் இன்ஜினீயர் வாக்-இன்!

Read more about: tips

Have a great day!

English Summary

Do the legwork on language
Have a great day!