'ரெஸ்யூமில்' இந்த விஷயம் இருக்கா... உங்க வேலைக்கு நாங்க கேரண்டி!


பக்காவான வேலை வேண்டும் என்றால் அதற்கு ஏற்றார் போல் நடை, உடை, பாவனை மட்டும் இருந்தால் போதாது. அதற்கு முன் நல்ல ரெஸ்யூம் கையில் இருப்பது அவசியம்.

இதற்காக பல்வேறு இணையதளங்கள் உள்ளன. இருந்த போதிலும் நாம் வேலைக்கான சரியான ரெஸ்யூம் எந்த தளத்திலும் கிடைக்காது. எனவே நம் கனவு வேலைக்காக கொஞ்சம் மெனக்கெடுவது அவசியம்.

ஒரு பக்காவான ரெஸ்யூம் மாடலை தேர்வு செய்து, நமது தகுதிகளையும் பிற விபரங்களை விண்ணப்பிக்கும் வேலைக்கு ஏற்றார் போல் மாற்றி தயார் செய்ய வேண்டியது மிக, மிக அவசியம்.

இதுக்கு தேவையான சில அடிப்படையான டிப்ஸ்களை இங்கே காணலாம்.


இன்டெர்வியூ என்பது ஒரு சகஜமான விஷயம் தான் அதனால் கவலை கொள்ளவேண்டாம். ஒருநாள் முன்னதாக இன்டெர்வியூ குறித்து உங்களைப்பற்றி சொல்லப்போகும் விஷயங்களை கண்ணாடி முன் நின்று ஒன்றுக்கு, பலமுறை சொல்லிப்பாருங்கள். குறிப்பாக சிறு எடுத்துக்காட்டுடன் தயார் செய்து கொள்வது மிகவும் நல்லது.


நீங்கள் பணியாற்றிய முன்னாள் பணியிடத்தை பற்றியும், அங்கிருக்கும் ஊழியர்களை பற்றியும் குற்றஞ்சாட்டுவதை தவிருங்கள்.

இல்லையேல் அது இன்டெர்வியூவின் போது உங்கள் மீது கெட்ட பிம்பந்த்தை ஏற்படுத்தும். "இக்கரைக்கு அக்கரை பச்சை" என்ற பழமொழிக்கு ஏற்ப எல்லா நிறுவனமும் கிட்டத்தட்ட ஒரே நடைமுறையத்தான் பின்பற்றும். அதற்கான வழிமுறைகள் தான் வேறு. முன்னாள் நிறுவனத்திற்கு உங்கள் பணியால் கிடைத்த பலன் என்ன என்பதை தெரியப்படுத்தவும்.

 


இணையத்தில் இருந்து சிறந்த டெம்பிளேட் தேர்வு செய்வது அவசியம். அதைவிட முக்கியம் தற்போது விண்ணப்பிக்கும் வேலைக்கு ஏற்றவாறு அதை மாற்றுவது. எங்கு இன்டெர்வியூ சென்றாலும் நமது ரெஸ்யூமை கூடுதலாக சில பிரதிகள் எடுத்து செல்வது அவசியம்.

உங்கள் அனுபவம், துறை, சாதனைகள் குறித்து சுருக்கமாக வரிகளை குறைத்து 1 அல்லது 2 பக்கங்களுக்குள் முடிக்கவும்.

 


நீங்கள் யார் என நிறுவனத்திற்கு உணர்த்துவது நீங்கள் உங்களை அறிமுகப்படுத்தும் விதம்தான். நிறுவனத்தார் கேட்கும் கேள்விக்கு கண்களை பார்த்து பதில் சொல்வது அவசியம். இது தன்நம்பிக்கையை வெளிக்காட்டும்.

நம்மை பற்றி எடுத்துரைக்கும் வார்த்தைகள் கேட்டு, கேட்டு சலிப்படைந்த வார்த்தைகளாக இல்லாமலும், பேச்சுவழக்கில் பயன்படுத்தும் கொச்சை வார்த்தைகளாக இல்லாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.

 


டெம்பிளேட்டில் உள்ளதை நல்லதான இருக்கு என விட்டு, விட்டு பின் உண்மைக்குமாறாக குறிப்பிட்ட விஷயங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்போது சிக்கி கொண்டவர்கள் ஏராளாம்.

உதாரணமாக சமைப்பது பிடிக்கும் என்று குறிப்பிட்டிருந்தால், அதுபற்றிய கேள்விகளுக்கும் விடையளிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

 


இறுதியாக இன்டெர்வியூவில் பங்கேற்பவர்களிடம் ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் கேட்க விரும்புகிறீர்களா? என்று கேட்பார்கள்.

இதற்கு பலரும் கூறும் ஒரே விடை இல்லை என்பதுதான். ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் இந்த பதிலை கூறலாம். எல்லாம் புரிந்திருந்தாலும் இந்த பதிலை கூறலாம். இதில் நீங்கள் எந்த ரகம் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். பொதுவாக மனதில் உதிக்கும் நியாயமான கேள்வி, சந்தேகங்களை கேட்க தவறாதீர்கள் இது உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்து காட்டும்.

 


இன்டெர்வியூவில் தேர்வு பெறுவதை பற்றி ரொம்பவும் யோசிக்காதீர், ஏனெனில் இது ஒன்றும் உங்களின் கடைசி இன்டெர்வியூ இல்லை.

சிறு தவறுகள் இருப்பின் அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்தமுறை சிறப்பாக முயற்சி செய்யுங்கள் வெற்றி நமக்கே.

 

Read more about: tips

Have a great day!

English Summary

7 Steps to Writing the Perfect Resume
Have a great day!