தமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி!


காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. 

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 10-08-2018 க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: காவல் உதவி ஆய்வாளர்கள் (தொழில்நுட்பம்)

காலியிடங்கள்: 309

சம்பளம்: ரூ.36900-116600.

தேர்வுக் கட்டணம்: ரூ. 500.

கல்வித்தகுதி: அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பாடப்பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

உடல் தகுதி: ஆண்கள் குறைந்தது 163 செ.மீ. உயரமும், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 154 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் உரிய சான்றிதழ்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பாருங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10-08-2018.

சென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

Have a great day!

English Summary

Tamilnadu police invites application for various post
Have a great day!