சென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை!


இந்தியன் வங்கியின் துணை நிறுவனமாக சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த் பேங்க் நிறுவனத்தில் காலியாக உள்ள செக்ரட்டேரியல் ஆபிஸர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 30-07-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: செக்ரட்டேரியல் ஆபிஸர் டிரெயினி.

பணியிடம்: சென்னை.

மொத்த காலியிடங்கள்: 05

சம்பளம்: ரூ. 9000 - 15,000

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் என்ஐஎஸ்எம்/என்சிஎப்எம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: டீலர்

காலியிடங்கள்: 10

பணியிடம்: இந்தியா முழுவதும்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் என்ஐஎஸ்எம்/என்சிஎப்எம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 2-3 லட்சம்.

வயது வரம்பு: 21 முதல் 30 வயதுக்குஉட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Assistant Vice President, HRD,
# 480, 1st Floor, Khivraj Complex 1,
Anna Salai, Nandanam,
Chennai 600035
Ph.no 044-24313094-97

குறிப்பு: விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த recruitment@indbankonline.com முகவரிக்கு இமெயிலும் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 30.07.2018.

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

Have a great day!

English Summary

Indbank bank invites application for various post
Have a great day!