டி.என்.பி.எஸ்.சி 2017... அக்ரிகல்சர் அசிஸ்டன்ட் ஆபிசர் பணி

டி.என்.பி.எஸ்.சி 2017 - அக்ரிகல்சர் அசிஸ்டன்ட் ஆபிசர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 07 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

சென்னை: டி.என்.பி.எஸ்.சி 2017 - அக்ரிகல்சர் அசிஸ்டன்ட் ஆபிசர் பணிக்கான காலியிடங்கள், கல்வித் தகுதிகள், விண்ணப்பக்கட்டணம் மற்றும் அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உதவி வேளாண் அதிகாரி பணிக்கு 333 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி 2017... அக்ரிகல்சர் அசிஸ்டன்ட் ஆபிசர் பணி

காலி இடம் ஒதுக்கீடு - ஜிடி பிரிவினருக்கு - 102 காலியிடங்கள், பிசி பிரிவினருக்கு - 87 காலியிடங்கள், பிசி (எம்) பிரிவினருக்கு - 13 காலியிடங்கள், எம்பிசி/டிசி பிரிவினருக்கு - 67 காலியிடங்கள், எஸ்சி பிரிவினருக்கு - 51 காலியிடங்கள், எஸ்சி (ஏ) பிரிவினருக்கு - 10 காலியிடங்கள், எஸ்டி பிரிவினருக்கு - 3 காலியிடங்கள் மொத்தம் 333 காலிப் பணியிடங்கள் வேளாண் உதவி அதிகாரி பணிக்கு நிரப்பப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

கல்வித் தகுதி -

12ம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அக்ரிகல்சரில் 2 வருட டிப்ளமோ கோர்ஸ் படித்திருக்க வேண்டும். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது தமிழ் நாடு அக்ரிகல்சர் பல்கலைக் கழகத்தோடு இணைந்த நிறுவனத்தில் கல்விக் கற்றிருத்தல் வேண்டும். காந்தி கிராம் கிராமப்புற நிறுவனம் திண்டுக்கல் மாவட்டம் அல்லது விவசாய ஆணையாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மற்ற நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் கல்வி கற்றிருத்தல் வேண்டும்.

டிப்ளமோ கோர்ஸ்ஸில் கட்டாயம் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் -

விண்ணப்பக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒன் டைம் ரிஜிஸ்டரேஷனுக்கு rs. 150/- வசூலிக்கப்படுகிறது.

தேர்வுக் கட்டணம் ரூ. 150/- வசூலிக்கப்படுகிறது.

11 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.

எஸ்சி எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவரை இழ்ந்தோர் ஆகியோருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

வயது வரம்பு -

விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், எம்பிசி/டிசி, பிசி, பிசி (எம்) மற்றும் கணவரை இழந்தோர் ஆகியயோருக்கு வயது வரம்பு கிடையாது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை -

எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு மற்றும் நேர் காணல் முறைப்படி விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரண்டுப் பகுதிகளாக நடத்தப்படும். 02 ஜூலை 2017ம் தேதி காலையில் முதல்தாள் தேர்வும் மதியம் இரண்டாம் தாள் தேர்வும் நடத்தப்படும். முதல் தாள் தேர்வில் 200 கேள்விகள் டிப்ளமோ அக்ரிகல்சர் பகுதியில் இருந்து கேட்கப்படும். இரண்டாம் தாள் தேர்வில் 100 கேள்விகள் 12ம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும்.

தேர்வு நடைபெறும் இடம் - சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு www.tnpscexams.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
tamilnadu public service commission has announced that 333 vacancies are there in assistant agricultural officer.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X