டிஇடி தேர்வு எழுதுபவர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட்

8 லட்சத்து 47 ஆயிரம் பேர் டிஇடி தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்துள்ளனர். டிஆர்பி அவர்களுக்கு ஹால் டிக்கெட் ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சென்னை : டிஇடி தேர்வினை தமிழகம் முழுவதும் 8லட்சத்துக்கும் மேற்ட்டவர்கள் எழுத உள்ளனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும் மற்றும் தபாலிலும் விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் விரைவில் அனுப்பப்படும் என டிஆர்பி தெரிவித்துள்ளது.

டிஇடி தேர்விற்கான விண்ணப்ப விநியோகம் மார்ச் 6ம் தேதி தொடங்கியது. மார்ச் 23ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

கடந்த இரண்டு வருடங்களாக டிஇடி தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் நீதிமன்றம் இந்த வருடத்திற்கான டிஇடி தேர்வினை ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

நீதிமன்ற உத்தரவு

நீதிமன்ற உத்தரவின் படி இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஆய்வு பணி

விண்ணப்பங்கள் ஆய்வு பணி

விண்ணப்பதாரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 8 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சரியாக பூர்தித செய்தா விண்ணப்பங்கள் மற்றும் தகுதி இல்லாத பாடங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் என சுமார் 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஹால் டிக்கெட்

ஹால் டிக்கெட்

சரியாக விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் டிஆர்பி ஹால் டிக்கெட் ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ஹால் டிக்கெட் தபாலில் அனுப்பப்படும் பணி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்திலும் ஹால்டிக்கெட் வெளியிடப்படும்.

தேர்வு மையம்

தேர்வு மையம்

தமிழகத்தில் ஏப்ரல் 29ம் தேதி 598 மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு 1,263 தேர்வு மையங்களும் அமைக்க டிஆர்டி ஏற்பாடு செய்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் பட்டியல்

விண்ணப்பதாரர்கள் பட்டியல்

தேர்வு எழுத தகுதியானவர்கள் பட்டியலை அடுத்த வாரம் இணைய தளத்தில் டிஆர்பி வெளியிட உள்ளது. அப்போது, ஹால் டிக்கெட் குறித்த விவரங்களும் இணையதளத்தில் வெளியிட டிஆர்பி ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதைத்தவிர தபால் மூலமும் ஹால் டிக்கெட்கள் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும்.

விண்ணப்பபதாரர்கள் இணையதளத்தில் இருந்தும் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

வெயிட்டேஜ் முறை

வெயிட்டேஜ் முறை

வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் டிஇடி தேர்வில் வெற்றி பெறுவோர் ஆசிரியர் பணி நியமனம் பெறுவதற்கு முன்பு கடை பிடித்த வெயிட்டேஜ் முறையின் கீழ் மதிப்பீடு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் (டிஇடி) பெற்ற மதிப்பெண்ணை 60 ஆல் பெருக்கி 150 ஆல் வகுக்க கிடைக்கும் மதிப்பெண், இடைநிலைஆசிரியர் தேர்வில் (டிடிஎட்) பெற்ற மெதிப்பெண்ணை 25 ஆல்பெருக்கி மொத்த மதிப்பெண்ணால் வகுக்க கிடைக்கும் மதிப்பு (25%), மேனிலைத் தேர்வில் (பிளஸ் 2) பெற்ற மதிப்பெண்ணுக்கு 15% நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதற்கு, மொத்த மதிப்பெண்ணை 15 ஆல் பெருக்கி, 1200ல் வகுக்க கிடைக்க மதிப்பு எடுக்கப்படும். மேற்கண்ட முறையின் கீழ் 60%, 25%, 15% என கணக்கிட்டு அவற்றை கூட்டினால் வரும் மதிப்பெண்படி பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் போடுவார்கள்.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Teachers Recruitment Board Government of Tamil Nadu conducts as Teacher Eligibility Test - TET for recruitment of Teachers. Tet 2017 hall ticket Releasing shortly at trb.tn.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X