டி.ஆர்.பி தேர்வு மூலம் 6,390 பேருக்கு வேலை வாய்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி மூலம் இந்த ஆண்டு 6.390 பேர் பணிநியமனம் செய்யப்பட உள்ளனர் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை : முதல் முறையாக டி.ஆர்.பி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார்.
மேலும் டெட் தேர்வு போக ஆறு போட்டி தேர்வுகள் நடக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணியிடம் உள்பட 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களைத் தேர்வுசெய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.

தேர்வுக்கால அட்டவணை

தேர்வுக்கால அட்டவணை

இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 பணியிடங்கள் நிரப்பப்படும். எந்தெந்த பணிகளுக்கு எப்போது தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணையை முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

வெளிப்படையான பணி நியமனம்

வெளிப்படையான பணி நியமனம்

ஆசிரியர் தேர்வுக்கான வருடாந்திரக் கால அட்டவணை வெளியிடுவது இதுதான் முதல்முறையாகும். ஆசிரியர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படுவதிலும் பணி நியமனம் வெளிப்படையாக இருக்கும். ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வெளியப்படையாக இருந்தது போது ஆசிரியர் பணி நியமனமும் வெளிப்படையாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வழிகாட்டும் மையங்கள்

வழிகாட்டும் மையங்கள்

மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாயப்பு குறித்து வழிகாட்டுவதற்காக அவர்களுக்கு வழிகாட்டி முகாம்கள் நடத்தும் முறையை கொண்டு வந்துள்ளோம். வழி காட்டும் மையங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏறத்தாழ 20 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பம் அறிமுகம்

ஆன்லைன் விண்ணப்பம் அறிமுகம்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு அச்சிடப்பட்ட விண்ணப்படிவங்கள் மூலமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வந்தனர். இந்த வருடம் முதன் முறையாக ஆன்லைன் விண்ணப்பப் படிவம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கல்வித்துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுதிதி வருகிறோம். பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றம் குறித்து பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்படும்.

பள்ளிக்க்ல்வித்துறை ஆய்வு

பள்ளிக்க்ல்வித்துறை ஆய்வு

பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து முன்னாள் துணை வேந்தர்கள் உள்ளிட்டசிறந்த கல்வியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். நிச்சயம் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக பாடத்திட்டம் இருக்கும். நீட் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த அவர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து பயிற்சி அளிக்கலாமா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
School Education Minister Sengottaiyan has told that TET 6390 Teacher vacancies will be filled this year. 6 Competitive examinations are held apart from the choice of the TET Exam.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X