பிளஸ்2 தேர்வு விடைத்தாள் நகல்... இன்று பிற்பகல் 2 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கலாம்..!

பிளஸ்2 தேர்வு விடைத்தாள் நகல் கோரியவர்கள் இன்று மதியம் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

சென்னை : பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு 6ந் தேதி கடைசி நாளாகும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு scan.tndge.in என்ற இணையதளத்தில் Application for Retotalling/Revaluation என்ற தலைப்பை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

பிளஸ்2 (மேல்நிலை) தேர்வை இந்த ஆண்டு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 பிளஸ்2 தேர்வு விடைத்தாள் நகல்... இன்று பிற்பகல் 2 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கலாம்..!

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling/Revaluation என்ற தலைப்பை கிளிக் செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 3ந் தேதி பிற்பகல் 1 மணி முதல் 6ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) மாலை 6 மணிக்குள் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மை கல்வி அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.

மேற்கண்ட தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Government Exams Director Tan. Vasundhara Devi told that plus 2 answer sheet copy can be downloaded from 2 pm .
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X