கேஸ்ஆர்டிசி தெரியும்.. கே.சி.இ.டி. தெரியுமா?

கேசிஇடி (kcet) எனப்படும் பொது நுழைவுத் தேர்வு கர்நாடக கல்வி வாரியத்தால் மாநில அளவில் நடத்தப்படும் தேர்வாகும்.

கேசிஇடி எனப்படும் பொது நுழைவுத் தேர்வு கர்நாடக கல்வி வாரியத்தால் மாநில அளவில் நடத்தப்படும் தேர்வாகும்.

கேசிஇடி என்னும் பொது நுழைவுத்தேர்வு கர்நாடக மாநிலக் கல்லூரிகளிலுள்ள பல்வேறு பட்டப்படிப்பில் சேருவதற்காக மாநில அரசால் நடத்தப்படும் தேர்வாகும். கேசிஇடி என்னும் பொது நுழைவுத் தேர்வு எந்த வகையான பட்டப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படுகிறது என்பதை கீழே காண்போம்.

கேஸ்ஆர்டிசி தெரியும்.. கே.சி.இ.டி. தெரியுமா?

மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஹேமியோபதி, யுனானி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா, பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, விவசாயப்பண்னை சார்ந்த அறிவியல் படிப்பு, பி.எஸ்.சி. (வேளாண்மை), பி.எஸ்.சி.(செரிகல்சர்) பி.எஸ்.சி. (தோட்டக்கலை), பி.எஸ்.சி. (வனவியல்) பி.எஸ்.சி. (வேளாண் உயிரி தொழில் நுட்பம்) பி.ஹெச்.எஸ்.சி. (ஹோம் சயின்ஸ்) பி.டெக். (வேளாண் தொழில்நுட்பம்) பி.டெக்.(உணவு தொழில்நுட்பம்) பி.டெக்.(பால் தொழில்நுட்பம்) பி.எப்.எஸ்.சி. (கடல் தொழில்) பி.டெக். (புட் சயின்ஸ் & டெக்) பி.எஸ்.சி.(வேளாண் விற்பனை மற்றும் கூட்டுறவு) பி.பார்மா. பார்மா- டி, மற்றும் இரண்டாவது வருடத்தில் நேரடியாக சேரும் பி.பார்மா படிப்பு.

மேலே உள்ள அனைத்துப் பட்டப்படிப்புகளுக்கும் கர்நாடக மாநில அரசால் நடத்தப்படும் கேசிஇடி என்னும் பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு கர்நாடக அரசு, பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்டும் அனைத்து கல்லூரிகளிலும் சேருவதற்கான தகுதித் தேர்வு ஆகும்.

கேசிஇடி எனப்படும் பொது நுழைவுத் தேர்விற்கான தகுதிகள்:

கேசிஇடி எனப்படும் பொது நுழைவுத் தேர்வு கர்நாடக கல்வி வாரியத்தால் மாநில அளவில் நடத்தப்படும் தேர்வாகும். இந்தத தேர்வு மருத்துவப் பாடப்பிரிவு, ஹோமியோபதி, பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த பாடப்பிரிவு மற்றும் வேளாண் துறை சார்ந்த பாடப்பிரிவில் முதலாம் ஆண்டில் சேருவதற்காக நடத்தப்படுகிறது. இது மாநில அளவில் நடைபெறும் தேர்வாகும்.

கேசிஇடி எனப்படும் பொது நுழைவுத் தேர்விற்கான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

படிப்பு : மருத்துவம் மற்றும் பல் மருத்துவம்.

கல்வி தகுதி: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும், இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் உட்பிரிவு 1, 2எ, 2பி, 3எ, & 3பி ஆகியோர் 40% மார்க் பெற்றிருக்க வேண்டும்)

பொது நுழைவுத் தேர்வு : பொது நுழைவுத் தேர்வில் குறைந்தது 50% மார்க் பெற்றிருக்க வேண்டும், (எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் உட்பிரிவு 1, 2எ, 2பி, 3எ, & 3பி ஆகியோர் 40% மார்க் பெற்றிருக்க வேண்டும்)

மெரிட்/ரேங்க் தகுதி : பொது நுழைவுத் தேர்வில் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தில் பெறும் மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

படிப்பு : ஆயுர்வேத மருத்துவம், ஹேமியோபதி, யுனானி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா (ஐஎஸ்எம் & ஹெச்)

கல்வி தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும், இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் உட்பிரிவு 1, 2எ, 2பி, 3எ, & 3பி ஆகியோர் 40% மார்க் பெற்றிருக்க வேண்டும்)

பொது நுழைவுத் தேர்வு : பொது நுழைவுத் தேர்வில் குறைந்தபட்சம் மார்க் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

மெரிட்/ரேங்க் தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் பெறும் மார்க் மற்றும் அதற்கு இணையான மார்க் பொது நுழைவுத் தேர்வில் உள்ள பாடங்களான இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்திலும் பெற்றிருக்க வேண்டும் இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

படிப்பு : பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (பிஇ/பிடெக்)

கல்வி தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும், இயற்பியல் வேதியியல் கணிதம் பயோடெக்னாலஜி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் 45% மார்க் பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் உட்பிரிவு 1, 2எ, 2பி, 3எ, & 3பி ஆகியோர் 40% மார்க் பெற்றிருக்க வேண்டும்)

பொது நுழைவுத் தேர்வு : பொது நுழைவுத் தேர்வில் குறைந்தபட்சம் மார்க் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

மெரிட்/ரேங்க் தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் பெறும் மார்க் மற்றும் அதற்கு இணையான மார்க் பொது நுழைவுத் தேர்வில் உள்ள பாடங்களான இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்திலும் பெற்றிருக்க வேண்டும் இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

படிப்பு : கட்டிடக்கலை (பி.ஆர்க்)

கல்வி தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும், இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் உட்பிரிவு 1, 2எ, 2பி, 3எ, & 3பி ஆகியோர் 45% மார்க் பெற்றிருக்க வேண்டும்)

பொது நுழைவுத் தேர்வு : பொது நுழைவுத் தேர்வில் குறைந்தபட்சம் மார்க் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

மெரிட்/ரேங்க் தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் பெறும் மார்க் மற்றும் அதற்கு இணையான மார்க் பொது நுழைவுத் தேர்வில் உள்ள பாடங்களான இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்திலும் பெற்றிருக்க வேண்டும் இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

படிப்பு : வேளாண்மை பட்டப்படிப்பு

கல்வி தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை விருப்பப் பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும்.

படிப்பு : கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இளங்கலை (பிவிஎஸ்சி & எஹெச்)

கல்வி தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும், இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் உட்பிரிவு 1, 2எ, 2பி, 3எ, & 3பி ஆகியோர் 40% மார்க் பெற்றிருக்க வேண்டும்)

பொது நுழைவுத் தேர்வு : பொது நுழைவுத் தேர்வில் குறைந்தபட்சம் மார்க் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

மெரிட்/ரேங்க் தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் பெறும் மார்க் மற்றும் அதற்கு இணையான மார்க் பொது நுழைவுத் தேர்வில் உள்ள பாடங்களான இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்திலும் பெற்றிருக்க வேண்டும் இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

படிப்பு : பி.டெக்.(உணவு தொழில்நுட்பம்) பி.டெக்.(பால் தொழில்நுட்பம்) பி.எப்.எஸ்.சி. (கடல் தொழில்) பி.டெக். (புட் சயின்ஸ் & டெக்) பி.எஸ்.சி.(வேளாண் விற்பனை மற்றும் கூட்டுறவு)

கல்வி தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை விருப்பப் பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும்.

பொது நுழைவுத் தேர்வு: பொது நுழைவுத் தேர்வில் குறைந்தபட்சம் மார்க் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

மெரிட்/ரேங்க் தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் பெறும் மார்க் மற்றும் அதற்கு இணையான மார்க் பொது நுழைவுத் தேர்வில் உள்ள பாடங்களான இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்திலும் பெற்றிருக்க வேண்டும் இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

படிப்பு : பி.டெக்.(வேளாண் பொறியியல்)

கல்வி தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இயற்பியல் வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை விருப்பப் பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும்.

பொது நுழைவுத் தேர்வு : பொது நுழைவுத் தேர்வில் குறைந்தபட்சம் மார்க் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

மெரிட்/ரேங்க் தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் பெறும் மார்க் மற்றும் அதற்கு இணையான மார்க் பொது நுழைவுத் தேர்வில் உள்ள பாடங்களான இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்திலும் பெற்றிருக்க வேண்டும் இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

படிப்பு : பி.பார்மா

கல்வி தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இயற்பியல் வேதியியல் உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 45%
பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ பார்மஸி பயின்றிருக்க வேண்டும்.

பொது நுழைவுத் தேர்வு : பொது நுழைவுத் தேர்வில் குறைந்தபட்சம் மார்க் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

மெரிட்/ரேங்க் தகுதி : பொது நுழைவுத் தேர்வில் உள்ள பாடங்களான இயற்பியல் வேதியியல் கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களில் பெறப்படும் மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

படிப்பு : இரண்டாம் ஆண்டு பி.பார்மா

கல்வி தகுதி : டிப்ளமோ பார்மஸி படிப்பில் 45% பெற்று கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொது நுழைவுத் தேர்வு : பொது நுழைவுத் தேர்வில் குறைந்தபட்சம் மார்க் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

மெரிட்/ரேங்க் தகுதி : பொது நுழைவுத் தேர்வில் உள்ள பாடங்களான இயற்பியல் வேதியியல் கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களில் பெறப்படும் மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

படிப்பு : டி பார்மா

கல்வி தகுதி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இயற்பியல் வேதியியல் உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 45% பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ பார்மஸி பயின்றிருக்க வேண்டும்.

பொது நுழைவுத் தேர்வு : பொது நுழைவுத் தேர்வில் குறைந்தபட்சம் மார்க் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

மெரிட்/ரேங்க் தகுதி : பொது நுழைவுத் தேர்வில் உள்ள பாடங்களான இயற்பியல் வேதியியல் கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களில் பெறப்படும் மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

2017ம் ஆண்டிற்கான பொது நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை

கேசிஇடி எனப்படும் பொது நுழைவுத் தேர்விற்கான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கேசிஇடி எனப்படும் பொது நுழைவுத் தேர்வு கர்நாடக கல்வி வாரியத்தால் மாநில அளவில் நடத்தப்படும் தேர்வாகும். இந்தத தேர்வு மருத்துவப் பாடப்பிரிவு, ஹோமியோபதி, பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த பாடப்பிரிவு மற்றும் வேளாண் துறை சார்ந்த பாடப்பிரிவில் முதலாம் ஆண்டில் சேருவதற்காக நடத்தப்படுகிறது. இது மாநில அளவில் நடைபெறும் தேர்வாகும். இந்த தேர்வு பெங்களூரில் நடத்தப்படுகிறது. இது 2017 ம் ஆண்டிற்கான நுழைவுத் தேர்வாகும்.

இந்த நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கர்நாடகா தேர்வாணையம் என்ற இணையதளத்திற்குச் சென்று கேசிஇடி எனப்படும் பொது நுழைவுத் தேர்விற்கு ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். இதில் நுழைவுத் தேர்வு எழுத தகுதி உள்ளவர்கள் மட்டுமே ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.

கேசிஇடி எனப்படும் 2017ம் ஆண்டிற்கான பொது நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ளவற்றை பின்பற்றவும்

கேஇஎ என்ற இணையதளத்தில் உள்ள பொது நுழைவுத் தேர்வு 2017ற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்

விண்ண்ப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பு கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளை நன்கு வாசித்துவிட்டு பூர்த்தி செய்யவும்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து முடித்த பிறகு உங்களுக்கு அப்ளிகேஷன் எண் மற்றும் பாஸ்வோர்டு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் இமெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

2வது படி :

விண்ணப்பதரார்கள் தற்போதைய பாஸ்போர்ட் சையிஸ் கலர் புகைப்படம் கையெழுத்து இடது கை கட்டவிரல் இம்ப்ரசன் மற்றும் பெற்றோர்களின் கையெழுத்து ஆகியவற்றை ஜெபிஜி மற்றும் ஜெபிஇஜி ஆகிய பார்மட்டுகளில் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும்.

நீங்கள் ஸ்கேன் செய்து வைத்திருக்கும் புகைப்படம் மற்றும் கையெழுத்தினை ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் அப்லோடு செய்யவும்.

3வது படி :

ஆன்லைனில் உள்ள பாங்க் செல்லானை பிரிண்ட் அவுட் எடுத்து விண்ணப்பக்கட்டணத்தை செலுத்த வேண்டும். இதனை ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், சின்டிகேட் பாங்க், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் பாங்க், ஆக்ஸிஸ் பாங்க் அல்லது கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்ட தபால் நிலையத்திலும் நீங்கள் கட்டலாம்.

பாங்க் அல்லது தபால் நிலையத்தில் நீங்கள் பணம் செலுத்திய பிறகு விண்ணப்பதாரர் பிரதி உங்களுக்கு வழங்கப்படும். அது நீங்கள் விண்ண்ப்பக்கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரம் ஆகும்.

விண்ணப்பதாரர்கள் வரைவோலை அதாவது டிடி மூலமாகவும் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தலாம். டிடி எடுக்க வேண்டிய முகவரி எக்ஸிகியூட்டிவ் டெரைக்டர், கர்நாடகா எக்சாமினேஷன் அத்தாரிட்டி, பேயபிள் அட் பெங்களூர் ஆகும்.

நிரப்பப்பட்ட ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அத்துடன் டிடியையும் இணைத்து கேஇஎ அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். டிடியின் பின்புறத்தில் விண்ணப்பப் படிவத்தின் நம்பரை எழுத வேண்டும்.

4வது படி :

விண்ணப்பப் படிவத்தை எ4 சைஸ் பேப்பரில் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் II பியூசி/12ம் வகுப்பு பயின்ற பள்ளி முதல்வரிடம் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையைக் கட்டாயம் பெற்று அனுப்ப வேண்டும்.

ஆவணங்கள் சரிபார்ப்பின் போது அதே பிரதி சமர்ப்பிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

Rs. 650/- கர்நாடகாவிலுள்ள பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்.
Rs. 500/- கர்நாடகாவிலுள்ள எஸ்சி/எஸ்டி/சிஏடி- 1 விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்
Rs. 750/- மற்ற மாநிலங்களிலுள்ள விண்ணப்பதாரர்களுக்கு.
Rs. 5000/- மற்ற நாடுகளிலுள்ள விண்ணப்பதாரர்களுக்கு.

முக்கிய குறிப்பு :

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வோர்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் எதிர் காலத் தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தகவல் சிற்றேடு கர்நாடகாவிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மார்ச் 20, 2017 அன்று கிடைக்கும்.

தொடர்வு கொள்ள வேண்டிய முகவரி :

எக்ஸிக்யூட்டிவ் டிரைக்டர்,
கர்நாடகா எக்சாமினேஷன் அத்தாரிட்டி,
சாம்பிட்ச் ரோடு, மல்லேஸ்வரம்,
பெங்களூர் - 580012 டெலி போன் நம்பர் : 23461575 / 568202

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Karnataka Examinations Authority, Bangalore is conducting Common Entrance Test (Karnataka CET-2017) for admission to first year undergraduate courses like Indian systems of Medicine and Homeopathy, Engineering / Technology and Agriculture courses, for the academic year 2017-18.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X