நீங்க என்ஜீனியரிங் படிச்சவரா.. எதுக்கு பாஸ் வெயிட்டிங்.. கடற்படையில் வெயிட்டா வேலை இருக்கு ஓடியாங்க!

கடற்படையில் பைலட் பணிக்கு என்ஜீனியர்கள் மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: முப்படைகளில் ஒன்றான கடற்படை பல்வேறு சிறப்பு நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்களை படைப்பிரிவில் சேர்த்து வருகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 31.03.2017க்குள் விண்ணப்பிக்கவும்.

கோர்ஸ் காமென்சிங் ஜன-2018 பயிற்சியின் கீழ் பைலட் மற்றும் ஏப்டிராபிக் கண்ட்ரோலர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க என்ஜீனியரிங் படிச்சவரா.. எதுக்கு பாஸ் வெயிட்டிங்.. கடற்படையில் வெயிட்டா வேலை இருக்கு ஓடியாங்க!

ஆண் பெண் என இருவரும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஷாட் சர்வீஸ் கமிஷன் கீழ் வரும் பணியிடங்கள் ஆகும்.

கல்வித் தகுதி -

பைலட் பணிக்கு - எஞ்ஜீனியரிங் பட்டப் படிப்பை முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டுத் தேர்வினை எதிர்கொள்ளுகிறவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் 12ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதப்பாடங்களை எடுத்து படித்து பின்னர் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 60% மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஏர் கண்ட்ரோல் டிராபிக் கண்ட்ரோலர் பணிக்கு - 12ம் வகுப்பில் 60% மார்க்குகளுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு -

ஏர் டிராபிக் கண்ட்ரோல் பணிக்கு - 19 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பைலட் பணிக்கு - 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை -

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை 31.03.2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு அதனை எதிர்காலத் தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை -

சர்வீசஸ் செலக்சன் போர்டு மூலம் விண்ணப்பிப்பவப்கள் தேர்விற்கு உட்படுத்தப்படுவார்கள். நுண்ணறிவுத் திறன், பாடங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடல், உளவியல் திறன், குழுத் தேர்வு, நேர்காணல், உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வுமுறைக்கு உட்படுத்தப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

மேலும் தகவல் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian navy has announced pilot and air traffic controller jobs. engineers and graduates can apply for this post.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X