இந்திய விமானப்படையில் பட்டதாரிகளுக்கு அதிகாரிப் பணியிடங்கள் காத்திருக்கின்றன... விண்ணப்பிக்க ரெடியா?

இந்திய விமானப்படையில் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியிடத்திற்கு ஆண் பெண் பட்டதாரிகள் சேர்க்கப்படுகிறார்கள்.

சென்னை : விமானப்படை நாட்டின் முப்படை ராணுவ பிரிவுகளில் ஒன்றாகும். தற்போது இந்த படைப்பிரிவில் கமிஷன்டு ஆபிசர் பணியில் தகுதியான இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. அப்கேட் என்ற தேர்வு மூலம் பிளையிங், டெக்னிக்கல் கிரவுண்ட் டியூட்டி ஆகிய பிரிவுகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்திய குடியுரிமை பெற்ற ஆண் பெண் பட்டதாரிகள் இந்த பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம். அவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிளையிங் பிரிவில் சேரும் விண்ணப்பதாரர்கள் 01.07.2017 தேதியில் 20 முதல் 24 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது 02.07.1994 மற்றும் 01.07.1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். பைலட் பயிற்சி பெற்றவர்கள் 26 வயதுடையவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விமானப்படையில் பட்டதாரிகளுக்கு அதிகாரிப் பணியிடங்கள் காத்திருக்கின்றன... விண்ணப்பிக்க ரெடியா?

டெக்னிக்கல் பிரிவு மற்றும் கிரவுண்ட் டியூட்டி விண்ணப்பதாரர்கள் 20 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 02.07.1992 மற்றும் 01.07.1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த தகுதித் தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.

கல்வித்தகுதி

பிளையிங் பிரிவு பணிக்கு 3 ஆண்டு கால அளவு கொண்ட பட்டப்படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 10, 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். பி.இ., பி.டெக் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள.

எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஏரோனாடிகல் என்ஜீனியரிங் மற்றும் இது சார்ந்த பொறியியல் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை படித்தவர்கள் டெக்னிக்கல் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்.

பல்வேறு விதமான பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, சி.ஏ. போன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் பணிகள் காத்திருக்கின்றன.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் அந்தந்த பணிக்கான உயரம், எடை, மார்பளவு, பார்வைத்திறன் மற்றும் உடல் உள நலம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டேஜ் -1, ஸ்டேஜ் - 2 என இரு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். விமானப்படை பொது சேர்க்கை தேர்வு (அப்கேட்) எனப்படும எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உடற் தகுதி, உடற்திறன் சோதித்தல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்காணல் ஆகியவை இதில் அடங்கும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு குறிப்பிட்ட காலம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பணி நியமனம் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இணையதளம் வழியாகவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். www.careerairforce.nic.in என்ற இணையதள முகவரியில் முழுமையான விபரங்களை படித்தறிந்து கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். முன்னதாக புகைப்படத்தை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும்.

முக்கிய தேதி

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 29.06.2017

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Air Force is one of the country's top military units. At present there is a notice to be added to the Commissioned Officer job in the Army.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X