இந்தியாவின் வேகமான ரேஸ் காரை உருவாக்கிய பம்பாய் ஐஐடி மாணவர்கள்..!!

டெல்லி: இந்தியாவின் அதிவேகமாந ரேஸ் காரை ஐஐடி பம்பாய் மாணவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இந்தக் காரை பம்பாய் ஐஐடி-யில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர் ஷர்துல் ஜேட் உருவாக்கியுள்ளார். இந்தக் காரை கல்வி விறுவனத்திலுள்ள பி.சி. சக்சோனா ஆடிட்டோரியத்தில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார் ஜேட்.

இந்தியாவின் வேகமான ரேஸ் காரை உருவாக்கிய பம்பாய் ஐஐடி மாணவர்கள்..!!

இந்தக் காருக்கு ஆர்கா என்று பெயர் வைத்துள்ளனர். இந்தக் காரை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படும் ஃபார்முலா ஸ்டூடண்ட் (யுகே) ரேஸிலும் பயன்படுத்தவுள்ளனர்.

ஃபார்முலா ஒன் ரேஸைப் போலவே மாணவர்களுக்காக இந்த ரேஸ் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

இந்தக் காரானது மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் 0 விலிருந்து 100 கிலோமீட்டர் வேகத்துக்கு 3.47 விநாடிகளில் இந்தக் கார் எட்டும்.

இந்தக் காரை உருவாக்க 70 மாணவர்கள் பணிபுரிந்துள்ளனர். மேலும் இதற்கு 10 மாதங்கள் பிடித்ததாம். ரேஸ் கார் உருவாக்கத்தில் ஆர்வமுள்ள மாணவர்களைத் தேடிப் பிடித்து இந்த அணியை ஜேட் உருவாக்கியுள்ளார்.

இந்தக் காரை 20 ஆயிரம் ஸ்பேர் பார்ட்ஸ்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் காரின் சேஸிஸ் எடையை 55 கிலோவிலிருந்து 29 கிலோவாகக் குறைத்து அருமையாக உருவாக்கியுள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The racing team of IIT Bombay has developed what they claim is the fastest Indian electric racing car Orca, which will race in July in Formula Student (UK), the international counterpart of formula one at engineering college level.The car, which has speed of more than 145 kmph and acceleration of 0-100 kmph in 3.47 seconds, was inaugurated by the students of IIT Bombay’s racing team at the PC Saxena Auditorium inside the college.Shardul Jade, a final year electrical engineering student who is part of the project, said this was not part of their curriculum and was made by the racing team after several brainstorming sessions at the laboratory, where students spend most of their time.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X