X கதிர்கள் எவ்வகை மின்னூட்டம் பெற்றுள்ளது என தெரியுமா?... பொது அறிவுக் கேள்விகள்

டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுஅறிவு வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

X கதிர்கள் எவ்வகை மின்னூட்டம் பெற்றுள்ளது என தெரியுமா?... பொது அறிவுக் கேள்விகள்

பொது அறிவு வினா விடைகள்

1. அணுக்கருப் பிளவை விளக்கும் அமைப்பு

அ. கூடு மாதிரி ஆ. குவாக் மாதிரி இ. போர் அணு மாதிரி ஈ. திரவத்துளி மாதிரி

(விடை : திரவத்துளி மாதிரி)

2. புகைப்படத்தகட்டினை பாதிக்கும் கதிர்கள்

அ. அகச்சிவப்பு கதிர்கள் ஆ. X கதிர்கள் இ. புறஊதா கதிர்கள் ஈ. காமா கதிர்கள்

(விடை : X கதிர்கள்)

3. ரூபி தண்டில் உள்ள குரோமிய அயனிகள்

அ. சிவப்பு ஒளியை உட்கவரும் ஆ. பச்சை ஒளியை உட்கவரும் இ. நீல ஒளியை உட்கவரும் ஈ. பச்சை ஒளியை உமிழும்

(விடை : பச்சை ஒளியை உட்கவரும்)

4. X கதிர்கள் எவ்வகை மின்னூட்டம் பெற்றுள்ளது?

அ. நேர் மின்னூட்டம் ஆ. எதிர் மின்னூட்டம் இ. மின்னூட்டமற்றவை ஈ. மேற்கூறிய எதுவுமில்லை

(விடை : மின்னூட்டமற்றவை)

5. அணுக்கருவினுள் உள்ள அணுக்கருத் துகள்கள் எதனால் கவரப்படுகின்றன?

அ. ஈர்ப்பியல் விசை ஆ. நிலைமின்னியல் விசை இ. அணுக்கரு விசை ஈ. காந்தவியல் விசை

(விடை : அணுக்கரு விசை)

6. அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப் பாதை கருத்தினைக் கூறியவர்

அ. J.J. தாம்சன் ஆ போர் இ. சாமர் பெல்டு ஈ. டி பிராலி

(விடை : சாமர் பெல்டு)

7. ஹைட்ரஜனின் அயனியாக்க மின்னழுத்த ஆற்றல் எவ்வளவு?

அ. 13.6eV ஆ. 12.5eV இ. 13.2eV ஈ. 15.2eV

(விடை : 13.6eV)

8. கேத்தோடுக் கதிர்கள் என்பவை

அ. எலக்ட்ரான் கற்றை ஆ. நேர்மின் அயனி கற்றை இ. மின்னூட்டமற்ற துகள் கற்றை ஈ. புழைக் கதிர்களைப் போன்றவை

(விடை : எலக்ட்ரான் கற்றை)

9. அணுவின் முதல் மூன்று வட்டப் பாதைகளின் ஆரங்களின் விகிதம்

அ. 1 : 03 : 05 ஆ. 1 : 04 : 09 இ. 1 : 2 : 3 ஈ. 1 : 08 : 27

(விடை : 1 : 04 : 09)

10. போரின் கொள்கையின்படி குறிப்பிட்ட தனித்தனியான மதிப்புகளைப் பெறும் அளவு

அ. இயக்க ஆற்றல் ஆ. நிலை ஆற்றல் இ. கோண உந்தம் ஈ. உந்தம்

(விடை : கோண உந்தம்)

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Above mentioned G.K. Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X