கோடை விடுமுறையில் எதை செய்யலாம்.. எதை செய்யப்படாது!

கோடை விடுமுறை என்றாலே குழந்தைகளுக்குக் கொண்டாட்டம். கோடையில் செய்ய வேண்டியவைகள் செய்யக் கூடாதவைகள்.

சென்னை : கோடை விடுமுறை என்றாலே குழந்தைகளுக்குக் கொண்டாட்டம். ஆனால் பெற்றோர்களுக்கோ அவர்களை சமாளிப்பது பெரும் திண்டாட்டமாகவே இருந்து வருகிறது. கோடையில் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது இதோ உங்களுக்காக.

குழந்தைகளுக்கு பெற்றோர் இந்த லீவு நாட்களில் நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் சிறு சிறு வீட்டு வேலைகள் என பல சிறந்த விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம்.

1. குழந்தைகள் பள்ளி விடுமுறை என்பதால் அதிக நேரம் தூங்குவார்கள். காலையில் அதுவும் ரொம்ப லேட்டாக எழுந்திருப்பார்கள். இது நல்லப் பழக்கம் இல்லை. பள்ளி செல்லும் நாட்களில் எழுந்திருப்பது போலவே சீக்கிரம் எழுந்திருப்பது நல்லது. ஏனென்றால் வெயில் நேரங்களில் அதிகமாக தூங்குவதால் உடல் அதிகப் படியாக சூடாகி விடும்.

கோடை விடுமுறையில் எதை செய்யலாம்.. எதை செய்யப்படாது!

2. குழந்தைகளுக்கு லீவு நாட்களில் பெற்றோர்கள் நல்லப் பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். செய்தித்தாள் வாசிப்பது, உலக அறிவை வளர்த்துக் கொள்வது போன்ற நல்லபழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் புதிய வார்த்தைகளை தினமும் குழந்தைகளுக்குக் கற்று கொடுக்க வேண்டும்.

3. குழந்தைகள் கதைக் கேட்க மிகவும் ஆசைப்படுவார்கள். ஆதலால் தினமும் ஒரு குட்டிக் கதை சொல்லுங்கள். நன்னெறிக் கதைகள் நிறைய உள்ளன. நீங்கள் சொல்லும் கதைகள் அவர்களுடன் பேசும். அவர்களுக்கு நல்லக் கருத்துக்கள் அடங்கிய கதைகளை டெய்லியும் சொல்லுங்கள்.

4. உங்கள் பழைய புத்தகங்களை தகுதியானவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். லீவு நாட்களில் புதிய வகுப்பிற்கான புத்தகங்களை நன்கு அட்டை போட்டு லேபிள் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

5. நீங்கள் எந்தப்பாடத்தில் வீக்காக இருக்கிறீர்களோ அந்தப் பாடங்களில் உள்ள சந்தேகங்களை நண்பர்கள், உறவினர்கள். அல்லது பெற்றோர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு தெளிவுப் பெற்றுக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் நீங்கள் விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்லும் போது அது உங்கள் படிப்பை எளிதாக்கி விடும்.

6. வெயில் அதிகம் இருப்பதால் குட்டி பிள்ளைங்களை ரொம்ப வெளியில் விடக் கூடாது. மாலை நேரங்களில் விளையாட விடலாம். மேலும் குட்டிப் பிள்ளைகளுக்கு படம் வரைவதற்கு, கர்சிவ் ரைட்டிங் எழுதுவதற்கு, டேபிள்ஸ் எழுதுவதற்கு கற்றுக் கொடுங்கள்.

7. குழந்தைகளை பெற்றோர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லலாம். சுற்றுலா என்றால் ஆடம்பரமாகத்தான் இருக்கனும் என்றில்லை. ஒரு நாள் சுற்றுலா கூடச் செல்லலாம். அல்லது உங்கள் பகுதியின் அருகில் உள்ள அருங்காட்சியகம், பொருட்காட்சியகம், பார்க். பீச், வனவிலங்குகள் பூங்கா, அறிவியல் கண்காட்சியகம் போன்ற இடங்களுக்கு குழந்தைகளை லீவு நாட்களில் அழைத்துச் செல்லலாம்.

8. நீங்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். நீங்கள் குடும்பத்திற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ளும் படி செய்வது நல்லது.

9. குட்டிக் குழந்தைகள் பெரும்பாலும் அன்புக்கு ஏங்குபவர்கள். அதனால்தான் அவர்கள் குட்டி குட்டி குறும்புகளை செய்து அவர்கள் பெற்றோர்களை கவருவார்கள். குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரமாவது செலவிடுங்கள். அவர்கள் மனதில் உள்ளவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

10. உங்கள் குழந்தைப் பருவ அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். லீவு நாட்களில் ஹிந்தி, பாட்டு கிளாஸ் என அவர்களைப் படுத்தி எடுக்க வேண்டாம். குழந்தைகளை ரிலாக்சாக விடுங்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
For parents, parents can learn many good things in these days of good habits and small households.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X